இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Thursday 2 June, 2011

உடல் பருமனும் உண்ணா நோன்பும்

              
சோமாலியாவில் பல குடும்பம் சோற்றுக்கு லாட்டரி  அடிப்பதும், இங்கோ சுகவாசிகள் சோற்றுக்குள்ளே சொக்கநாதனைத்தேடி, உடல் பருத்து, குருதி கொதித்து மருத்துவரை நாடி, உப்புச்சப்பில்லா உணவை வேண்டா வெறுப்பாய் உண்பதும் நாம் அன்றாடம் கண்டும் களித்தும் வரும் காட்சிகள்.

 உணவு தட்டுப்பாட்டிற்கு நிகராய் உணவு கட்டுப்பாடும் முக்கியத்துவம் பெற்று வரும் காலமிது. சமவிகித சத்துக்கள் நிறைந்த உணவை சரியான அளவில் உண்பதுவே சாலச்சிறந்தது. விஞ்ஞான  விஷயமறிந்தவர்  கூறுவதெல்லாம் கொழுப்பும் சர்க்கரையும் கூடுதலாகவும், நார்சத்தும் மாவுப்பொருளும் குறைவாகக் காணப்படும் உணவே இதய தசைகளுக்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் தமனிகளை அடைக்கச்செய்து, இதய நோய்களை இனிதே வரவேற்பவையாம். இத்துடன் நிற்பதில்லை, சர்க்கரை நோயும், சற்றே காலதாமதமாய் புற்று நோயும் புறப்பட்டு வருமாம். 
 சிந்திப்பீர்  சில நொடி!
 துரித  உணவுகள் என்றும் துன்பம் விளைவிப்பவையே. புற்றீசல் போல் புறப்பட்டு வரும் புதிய உணவு வகைகள், உடல்நலம் பேணும் உணவு வகைகளை உடனே மறக்கச்செய்கின்றன. ஒரு நேர உணவை விட்டொழித்தால், உடல் பருமன் குறையுமென பக்குவமின்றி பலரும் பட்டினி கிடக்கின்றனர்.  அதேபோல், கொழுப்பென்றாலே கூடாதென்பதும், இனிப்பென்றாலே இனி தொடுவதில்லையென்பதும் உடலைக்குறைக்க உதவாது, மாறாய் உடல் நலத்தைக்கெடுக்கவே வழிகோலும். சரிவிகித  சம உணவை நன்றாய்ச் சமைத்து, நிறைவாய் உண்பதே நிச்சயம் துணை புரியும்.
விதவிதமாய் உண்ணலாம்- விகிதாச்சாரமாய் உண்பதே நலம் பயக்கும். உணவுத்தேவையென்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடும். பட்டினி வைத்தியம் பயன்படாது.
டிஸ்கி: இது கடந்த வருடமே உங்கள் வலைப்பூவில் வாசித்த விஷயமாச்சே என்று சொல்பவர்களுக்கு:  பதிவிட்ட நேரத்தில் பலரை சென்றடைய வில்லை என்பதால்,  இப்போது  மீள் பதிவு.
Follow FOODNELLAI on Twitter

47 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் மழை எனை நனைத்ததே

உணவு உலகம் said...

உங்கள் முதல் வருகை என்னை சந்தோஷப்படுத்தியதே!

சி.பி.செந்தில்குமார் said...

>>டிஸ்கி: இது கடந்த வருடமே உங்கள் வலைப்பூவில் வாசித்த விஷயமாச்சே என்று சொல்பவர்களுக்கு: பதிவிட்ட நேரத்தில் பலரை சென்றடைய வில்லை என்பதால், இப்போது மீள் பதிவு.

யாரும் தப்பா நினைக்காதீங்க. அண்ணன் ஏற்கனவே போட்ட பதிவை இன்னொரு தடவை போட மாட்டார்.. இதான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்.. அவருக்கு ஃபிரெஸ் தான் பிடிக்கும் செகண்ட்ஸ் நாட் லைக்கிங்க்.. ஹி ஹி

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
>>டிஸ்கி: இது கடந்த வருடமே உங்கள் வலைப்பூவில் வாசித்த விஷயமாச்சே என்று சொல்பவர்களுக்கு: பதிவிட்ட நேரத்தில் பலரை சென்றடைய வில்லை என்பதால், இப்போது மீள் பதிவு.
யாரும் தப்பா நினைக்காதீங்க. அண்ணன் ஏற்கனவே போட்ட பதிவை இன்னொரு தடவை போட மாட்டார்.. இதான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்.. அவருக்கு ஃபிரெஸ் தான் பிடிக்கும் செகண்ட்ஸ் நாட் லைக்கிங்க்.. ஹி ஹி//
என் அருமை கொள்கை பரப்பு செயலாள்ர் சிபிக்கு நன்றி.

இம்சைஅரசன் பாபு.. said...

மீள் பதிவு என்றாலும் நான் இப்போது தான் படித்தேன் ..

உணவு உலகம் said...

//இம்சைஅரசன் பாபு.. said...
மீள் பதிவு என்றாலும் நான் இப்போது தான் படித்தேன் ..//
வருகைக்கு நன்றி, பாபு.

சி.பி.செந்தில்குமார் said...

அப்போ சம்பளம் உண்டா?அட்லீஸ்ட் நீங்க வாங்கற கிம்பளத்துல 25% தருவீங்களா/#டவுட்டு ஹி ஹி

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
அப்போ சம்பளம் உண்டா?அட்லீஸ்ட் நீங்க வாங்கற கிம்பளத்துல 25% தருவீங்களா/#டவுட்டு ஹி ஹி//
சம்பளம் குடுத்தா என்ன வேலையென்றாலும் செய்பவரா? அச்சச்சோ! ஆள் தெரியாம நியமிச்சுட்டனே.

Unknown said...

அண்ணே கலக்கல் பதிவு!

Unknown said...

" சி.பி.செந்தில்குமார் said...
அப்போ சம்பளம் உண்டா?அட்லீஸ்ட் நீங்க வாங்கற கிம்பளத்துல 25% தருவீங்களா/#டவுட்டு ஹி ஹி"

>>>>>>>>>

ஏன்யா உன்னை போல பிறரை என்னும் உள்ளமா நீ ஹிஹி!

இராஜராஜேஸ்வரி said...

சுகவாசிகள் சோற்றுக்குள்ளே சொக்கநாதனைத்தேடி, உடல் பருத்து, குருதி கொதித்து மருத்துவரை நாடி, உப்புச்சப்பில்லா உணவை வேண்டா வெறுப்பாய் உண்பதும் நாம் அன்றாடம் கண்டும் களித்தும் வரும் காட்சிகள்./
நிதர்சனமாய் காண்பதுதான்.
மிகுந்த பயனளிக்கும் அருமையான பகிர்வுக்கு நன்றி ஐயா.

உணவு உலகம் said...

//விக்கி உலகம் said...
அண்ணே கலக்கல் பதிவு!//
நன்றி தல.

உணவு உலகம் said...

//விக்கி உலகம் said...
" சி.பி.செந்தில்குமார் said...
அப்போ சம்பளம் உண்டா?அட்லீஸ்ட் நீங்க வாங்கற கிம்பளத்துல 25% தருவீங்களா/#டவுட்டு ஹி ஹி"
ஏன்யா உன்னை போல பிறரை என்னும் உள்ளமா நீ ஹிஹி!//
போகட்டும் விடுங்க.

உணவு உலகம் said...

//இராஜராஜேஸ்வரி said...
சுகவாசிகள் சோற்றுக்குள்ளே சொக்கநாதனைத்தேடி, உடல் பருத்து, குருதி கொதித்து மருத்துவரை நாடி, உப்புச்சப்பில்லா உணவை வேண்டா வெறுப்பாய் உண்பதும் நாம் அன்றாடம் கண்டும் களித்தும் வரும் காட்சிகள்./
நிதர்சனமாய் காண்பதுதான்.
மிகுந்த பயனளிக்கும் அருமையான பகிர்வுக்கு நன்றி ஐயா.//
வருக்கைக்கும் வாழ்த்திற்கும் நன்றி, சகோ.

sathishsangkavi.blogspot.com said...

அண்ணே அனைவரும் அறிய வேண்டிய விசயம்தான்...

நல்ல பயன் உள்ள பதிவு...

erodethangadurai said...

சரிவிகித  சம உணவை நன்றாய்ச் சமைத்து, நிறைவாய் உண்பதே நிச்சயம் துணை புரியும்.

சரியாக சொல்லி உள்ளீர்கள் . . . !

உணவு உலகம் said...

//சங்கவி said...
அண்ணே அனைவரும் அறிய வேண்டிய விசயம்தான்...//
நன்றி. என் வயதைக் கூட்டுவதில் சிபி ஆரம்பித்து வைத்த சதி-அனைவரும் அண்ணே என்றழைப்பது.

உணவு உலகம் said...

//ஈரோடு தங்கதுரை said...
சரிவிகித சம உணவை நன்றாய்ச் சமைத்து, நிறைவாய் உண்பதே நிச்சயம் துணை புரியும்.
சரியாக சொல்லி உள்ளீர்கள் . . !//
வருகைக்கு நன்றி நண்பரே.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

துரித உணவில் விழ்துவிடும் இன்றைய தலைமுறைக்கு தேவையான பதிவு...

குட் மார்னிங் ஆபிஸர்...

MANO நாஞ்சில் மனோ said...

மீள்பதிவேன்றாலும் பயனுள்ள பதிவு...!!!

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
அப்போ சம்பளம் உண்டா?அட்லீஸ்ட் நீங்க வாங்கற கிம்பளத்துல 25% தருவீங்களா/#டவுட்டு ஹி ஹி//

ஏண்டா நாதாரி, மூதேவி, பன்னாடை, பரதேசி, நீ திருந்தவே மாட்டியாடா கொய்யால....???

MANO நாஞ்சில் மனோ said...

விக்கி உலகம் said...
" சி.பி.செந்தில்குமார் said...
அப்போ சம்பளம் உண்டா?அட்லீஸ்ட் நீங்க வாங்கற கிம்பளத்துல 25% தருவீங்களா/#டவுட்டு ஹி ஹி"

>>>>>>>>>

ஏன்யா உன்னை போல பிறரை என்னும் உள்ளமா நீ ஹிஹி!

அழுகின தக்காளி எடுத்து எறிடா விக்கி அந்த ராச்கல் மீது....

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் ஏழு நாந்தேன் ஆபீசர் ஹி ஹி....

உணவு உலகம் said...

//# கவிதை வீதி # சௌந்தர் said...
துரித உணவில் விழ்துவிடும் இன்றைய தலைமுறைக்கு தேவையான பதிவு...
குட் மார்னிங் ஆபிஸர்...//
வாங்க நண்பரே.

உணவு உலகம் said...

//MANO நாஞ்சில் மனோ said...
மீள்பதிவேன்றாலும் பயனுள்ள பதிவு...!!!//
நன்றி மனோ. அதென்ன இன்னும் பஹ்ரைன்ல உக்கார்ந்துட்டு பின்னூட்டம் போட்டுட்டு. சீக்கிரம் கிளம்புங்க.

உணவு உலகம் said...

//MANO நாஞ்சில் மனோ said...
சி.பி.செந்தில்குமார் said...
அப்போ சம்பளம் உண்டா?அட்லீஸ்ட் நீங்க வாங்கற கிம்பளத்துல 25% தருவீங்களா/#டவுட்டு ஹி ஹி//
ஏண்டா நாதாரி, மூதேவி, பன்னாடை, பரதேசி, நீ திருந்தவே மாட்டியாடா கொய்யால....???//
நெல்லைல ரூம் போட்டு கும்மணும் போல.

உணவு உலகம் said...

//MANO நாஞ்சில் மனோ said...
தமிழ்மணம் ஏழு நாந்தேன் ஆபீசர் ஹி ஹி....//
எல்லோருக்கும் அப்படித்தானே போட்டுட்டு வாறீங்க. உங்கள் சேவை பதிவுக்குத் தேவை.

ஷர்புதீன் said...

உணவு குறித்த பல கேள்விகளுக்கு உங்களிடம் இருந்து பதிவர்கள் சந்திப்பில் கேள்வி கேட்கலாம் என்று ப்ளான் செய்துள்ளேன்

நிரூபன் said...

சோமாலியாவில் பல குடும்பம் சோற்றுக்கு லாட்டரி அடிப்பதும், இங்கோ சுகவாசிகள் சோற்றுக்குள்ளே சொக்கநாதனைத்தேடி, உடல் பருத்து, குருதி கொதித்து மருத்துவரை நாடி, உப்புச்சப்பில்லா உணவை வேண்டா வெறுப்பாய் உண்பதும் நாம் அன்றாடம் கண்டும் களித்தும் வரும் காட்சிகள்.//

ஆஹா...ஆரம்பமே கவிதையில் நடையில் சூப்பரா இருக்கே.

நிரூபன் said...

கடையில் ஹையீன் அற்ற உணவுப் பொருட்களை வாங்கி உண்டு, தொற்று நோய்களைத் தேடிக் கொள்வதை விட, நீங்கள் கூறுவது போல வீட்டில் சுகாதாரமான முறையில் உணவினைச் சமைத்தல் தால் உடல் நலத்திற்கும் நன்மை பயக்கும்,

விளக்கத்திற்கும், விரிவான ஆலோசனைப் பதிவிற்கும் நன்றிகள் சகோ.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரொம்பச் சரியா சொல்லி இருக்கீங்க ஆப்பீசர்.....

Anonymous said...

தொப்பை தான் முக்கிய பிரச்சனை..அருமையான தகவல்கள் நன்றி

செல்வா said...

மொத்தத்துல கண்டதையும் திங்காம அதே சமயம் பட்டினியும் கிடக்காம இருந்தாலே போதும்னு சொல்லுறீங்க.. உண்மைதான் சார் :-)

சென்னை பித்தன் said...

மீள் பதிவாயினும்,தேவையான பதிவே!

உணவு உலகம் said...

//ஷர்புதீன் said...
உணவு குறித்த பல கேள்விகளுக்கு உங்களிடம் இருந்து பதிவர்கள் சந்திப்பில் கேள்வி கேட்கலாம் என்று ப்ளான் செய்துள்ளேன்//
வாங்க, வாங்க.
மனோ,அப்படியே ஒரு கேள்விக்கு இவ்வளவுன்னு ரேட் கூட ஃபிக்ஸ் பண்ணுங்கப்பா!

உணவு உலகம் said...

//நிரூபன் said...
சோமாலியாவில் பல குடும்பம் சோற்றுக்கு லாட்டரி அடிப்பதும், இங்கோ சுகவாசிகள் சோற்றுக்குள்ளே சொக்கநாதனைத்தேடி, உடல் பருத்து, குருதி கொதித்து மருத்துவரை நாடி, உப்புச்சப்பில்லா உணவை வேண்டா வெறுப்பாய் உண்பதும் நாம் அன்றாடம் கண்டும் களித்தும் வரும் காட்சிகள்.
ஆஹா...ஆரம்பமே கவிதையில் நடையில் சூப்பரா இருக்கே.//
இன்னும் உங்க அளவிற்கு வரவில்லை, நண்பரே.

உணவு உலகம் said...

//Blogger நிரூபன் said...

கடையில் ஹையீன் அற்ற உணவுப் பொருட்களை வாங்கி உண்டு, தொற்று நோய்களைத் தேடிக் கொள்வதை விட, நீங்கள் கூறுவது போல வீட்டில் சுகாதாரமான முறையில் உணவினைச் சமைத்தல் தால் உடல் நலத்திற்கும் நன்மை பயக்கும்,

விளக்கத்திற்கும், விரிவான ஆலோசனைப் பதிவிற்கும் நன்றிகள் சகோ.//
உங்கள் வருகையும், வாழ்த்தும் என்னை உற்சாகப்படுத்தும்.

உணவு உலகம் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ரொம்பச் சரியா சொல்லி இருக்கீங்க ஆப்பீசர்.....//
வாங்க சார்.

உணவு உலகம் said...

/ஆர்.கே.சதீஷ்குமார் said...
தொப்பை தான் முக்கிய பிரச்சனை..அருமையான தகவல்கள் நன்றி//
வருகைக்கு நன்றி, நண்பரே.

உணவு உலகம் said...

//கோமாளி செல்வா said...
மொத்தத்துல கண்டதையும் திங்காம அதே சமயம் பட்டினியும் கிடக்காம இருந்தாலே போதும்னு சொல்லுறீங்க.. உண்மைதான் சார் :-)//
சத்தியமான வரிகள், செல்வா.

உணவு உலகம் said...

//சென்னை பித்தன் said...
மீள் பதிவாயினும்,தேவையான பதிவே!//
எப்படியும் ஓட்ட தேத்திபுட்டோம்ல.

கூடல் பாலா said...

நல்ல நல்ல அறிவுரைகள் !

உணவு உலகம் said...

நன்றி பாலா.

எம் அப்துல் காதர் said...

நடப்புலகிற்கு ஏற்ற நல்ல பதிவு சார்!

உணவு உலகம் said...

வருகைக்கு நன்றி, நண்பரே.

Unknown said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல..எங்க பார்ட்டி போடுவம்??

உணவு உலகம் said...

17.06.11ல் நெல்லை வாங்க. ஜமாய்ச்சிருவோம்.