இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 11 May, 2012

உணவுப்பொருளில் மரபணுமாற்றம். ஏற்றம் தருமா- ஏமாற்றம் தருமா?

இது ஒரு மீள் பதிவு:
உணவுப்பொருளில் மரபணுமாற்றம்.
ஏற்றம் தருமா- ஏமாற்றம் தருமா?

    மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரி  கலந்த உணவே, மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவாகும். ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓராயிரம் மரபணுக்கள் உடலில் உண்டு. ஒவ்வொரு மரபணுவும் டி.என்.ஏக்களால் உருவானவை. உயிரினங்கள் தங்கள் வேலையைச் செய்யவும், தம்மைத்தாமே பழுது பார்த்துக்கொள்ளவும், இனப்பெருக்கம் செய்யவும் தேவையான தகவல்கள் டி.என்.ஏக்கள் மூலமே அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

    மனிதன் தான் விரும்பும் குணங்களை உயிரினங்களில் உருவாக்கவே, மரபணு மாற்றம் எனும் மாயவித்தையைச் செய்கிறான். ஒரு உயிரினத்தின் மரபணுக்களைத் தேர்ந்தெடுத்து மற்றொரு உயிரினத்தில் புகுத்துகிறான். இது, மாற்று மரபணுக்களை அந்த உயிரினத்தில் உருவாக்குகிறது.
      1983ல் - முதல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரம் உருவாக்கப்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை சோளம், சோயா பீன்ஸ், அரிசி, கடுகு, தக்காளி, பருத்தி என பல தானியங்களிலும் பல்கிப் பெருகி வருகிறது - இந்த மரபணு மாற்றம்..
    தாவரங்கள் பூச்சிகள்   மற்றும் வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்ளவும், களைக்கொல்லி மருந்துகளை தாக்குபிடிக்கவும், தானியங்களின் கரோட்டின் மற்றும் இரும்புச்சத்துக்களை அதிகப்படுத்தவும் உதவுகின்றன - இந்த மரபணு மாற்றம்.
      மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்கள்  அமெரிக்கா, கனடா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ மற்றும் சீனாவில் 12 மில்லியன் ஹெக்டரில்    பயிரி டப்பட்டாலும், சோயா, சோளம், பருத்தி போன்றவையே அவற்றில் அதிகம். 70 சதத்திற்கும் மேற்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்கள் களைக்கொல்லி மருந்துகளை தாக்குபிடிக்கவே தயார்  செய்யப்படுகின்றன. 15 சதவிகித தாவரங்கள் பூச்சிகளை எதிர்கொள்ளவும் தயார்  செய்யப்படுகின்றன. விளைச்சலை அதிகப்படுத்தவும், உயிர்  சத்துக்களை உயர்த்தவும் 1 சதவிதத்திற்கும் குறைவான தாவரங்களே தயார்  செய்யப்படுகின்றன.
        மரபணு மாற்றம் செய்த தக்காளி, கத்தரி, சோயா பீன்ஸ் மற்றும் சோளம் போன்றவை உடல்நலக் கோளாறுகள் விளைவித்ததாக புகார்கள் இதுநாள்வரை இல்லையென்றாலும் புதிதாய்ப் புகுத்தப்பட்டுள்ள மரபணு மாற்றம், தொடரும் நாடகளில் தொல்லை தராதென கூற இயலாது.
        புதிய புரதத்தின் புறப்பாடு, ஓர்  உயிரிலிருந்து மற்றொரு உயிருக்கு எடுத்துச் செல்லப்படும் மாற்று மரபணுவின் ஒவ்வாமை ஆகியவை உடல் நலனிற்கு உகந்ததா என்பதை, தொடாந்து செய்யப்படும் ஆய்வுகளே உறுதிப்படுத்தும்.
        இப்பொழுதுதான் இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகள் குறித்த விழிப்புணர்வு விடியத் தொடங்கியுள்ளது. நாளைய பொழுது நல்லதாய் விடியட்டும்.
       

                      
Follow FOODNELLAI on Twitter

10 comments:

இராஜராஜேஸ்வரி said...

இப்பொழுதுதான் இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகள் குறித்த விழிப்புணர்வு விடியத் தொடங்கியுள்ளது. நாளைய பொழுது நல்லதாய் விடியட்டும்.

விழிப்புணர்வு பதிவுக்கு நன்றிகள்.. பாராட்டுக்கள்..

Prabu Krishna said...

இந்தியாவில் இது குறித்து பெரும் அதிருப்தி தான் நிலவுகிறது. ஏகாதிபத்திய நாடுகளின் அடிமையாக இந்திய விவசாயிகள் மாறி விடுவார்களோ என்று பயமாகவும் உள்ளது.

சி.பி.செந்தில்குமார் said...

வணக்கம் ஆஃபீசர் ( இது ஒரு மீள் கமென்ட் ஹி ஹி )

Unknown said...

மரபணுமாற்ற காய்கறிகள் கெடுதல் விளைவிக்கும் ஒவ்வாமை ஏற்படும் என நிருபிக்கப்படவில்லை. ஆனால் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் அதை தீவிரமாக எதிர்க்கிறார் ஆண் மலட்டுதன்மை உண்டாக்கும் காரணிகள் இருப்பதாகவும் கூறுகிறார்கள்!

Unknown said...

விழிப்புணர்வு பதிவுக்கு வாழ்த்துக்கள்!

விடுமுறை எல்லாம் எப்படிப்போகுது அண்ணே....!

MANO நாஞ்சில் மனோ said...

நானும் வீட்டுல சொல்லி வச்சிருக்கேன், வித்தியாசமாக தெரியும் காய்கறிகளை வாங்காதீங்கன்னு நன்றி ஆபீசர்.

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

உணவுப்பொருளில் மரபணுமாற்றம். ஏற்றம் தருமா- ஏ(மா)ற்றம் தருமா?
-------------------------------
அழகான தலைப்பு ....அருமையான கருத்து...
சுஜாதா மாத்ரி சுருக்கமான பதிவு அழகு .

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

உணவுப்பொருளில் மரபணுமாற்றம். ஏற்றம் தருமா- ஏ(மா)ற்றம் தருமா?
-------------------------------
அழகான தலைப்பு ....அருமையான கருத்து...
சுஜாதா மாத்ரி சுருக்கமான பதிவு அழகு .

Pespro said...

பயிர் சாகுபடி பரப்பளவு அதிகரிக்க முடியாது. உரம் , பூச்சி மருந்து உபயோகத்தால் மண் பாழானது. உயர் விளைச்சல் எடுத்தால் கட்டுபடியான விலை கிடைக்காது . இது இன்றைய விவசாயியின் நிலை . இருப்பினும் மக்களுக்கு தங்கு தடையின்றி உணவு பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டியது மைய அரசின் கடமை. பொது நலன் கருதி உடல் நலம் பாதிக்குமா /பாதிக்காதா என கண்டறிய வேண்டியதும் அரசின் கடமை . பசுமை புரட்சி மாதிரி இதுவும் ஒரு மரபணு மாற்ற தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சி . நம்ம நாட்டுக்கு வேலை ஆகுமா / ஆகாதா பொறுத்து இருந்து பார்ப்போம் .

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி சார்.