இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 11 January, 2010

உங்களுக்கு தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?


·    உணவுப்பொருட்களில் செயற்கை வண்ணங்கள்  சேர்க்கப்பட்டால் , அது பற்றிய விபரத்தை அந்த உணவுப்பொருள் பொட்டலங்களின் லேபிளில் குறிப்பிடவேண்டும்.


·    கேசரி பருப்பை தனியாகவோ, வேறு உணவுப் பொருட்களுடன் சேர்த்தோ விற்கக்கூடாது. 


·    பழங்களைப் பழுக்க வைக்க கார்பைடு  (அசிட்டிலின்) வாயுவைப் பயன்படுத்தக்கூடாது. 


·    நெய்யை வெண்ணெயுடன் சேர்த்து விற்கக்கூடாது. 


·    உணவுப்பொருட்களில் செயற்கையாக இனிப்புச்சுவை தரும் பொருட்கள் சேர்க்கப்பட்டால், அது பற்றிய விபரத்தை அந்த உணவுப்பொருள் பொட்டலங்களின் லேபிளில் குறிப்பிடவேண்டும்.


·    உணவுப்பொருட்களில் பயன்படுத்த விற்பனை செய்யப்படும் செயற்கை வண்ணங்கள் ஐ.எஸ்.ஐ தர முத்திரை பெற்றிருக்க வேண்டும்.


·    உணவுக்கலப்படத்தடை சட்டத்தின் கீழ் உரிமம்  பெற்ற கடைகளில் மட்டுமே, உணவுப்பொருட்களில் பயன்படுத்தும் செயற்கை வண்ணங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும்.


·    உணவுப்பொருள் விற்பனை செய்யும் நிறுவனங்களில், பூச்சிக்கொல்லி  மருந்துகள் விற்பனை செய்யக்கூடாது.


·    பால் பவுடர் குழந்தை உணவு போன்றவை ஐ.எஸ்.ஐ தர முத்திரையின்றி விற்பனை செய்யக்கூடாது.


·    ஒரு உணவுப்பொருளில், இரு வேறு வகையான கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் பிரிசர்வேட்டிவ்     பயன்படுத்தக்கூடாது.


·    உணவுப்பொருட்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கக்கூடாது.

Follow FOODNELLAI on Twitter

6 comments:

PPattian said...

//· உணவுப்பொருள் விற்பனை செய்யும் நிறுவனங்களில், பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யக்கூடாது.//

பெரிய கார்ப்ப்ரேட் நிறுவனங்கள் நடத்தும் கடைகள் முதல். சின்ன பெட்டிக் கடை வரை எல்லா இடத்திலும் இவை இரண்டுமே விற்கப்படுகிறன. இரண்டும் வைக்கப்படும் இடங்களுக்கு போதிய இடைவெளி விட்டால் போதுமோ?

உணவு உலகம் said...

appadi illai.

esaarkay said...

உணவுப்பொருள் விற்பனை செய்யும் நிறுவனங்களில், பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யக்கூடாது.

Please explain!!!!!!!!

esaarkay said...

"உணவுப்பொருள் விற்பனை செய்யும் நிறுவனங்களில், பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யக்கூடாது."

you mean pesticides used in crops, paddy etc???????

உணவு உலகம் said...
This comment has been removed by the author.
உணவு உலகம் said...

நன்றி. நான் சொன்னது விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்துகளைத்தான்.