இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Sunday 4 April, 2010

மெழுகு பூசிய ஆப்பிள்கள் மெல்ல கொல்லும் நிஜங்கள்.


மெழுகு பூசிய ஆப்பிள்கள் மெல்ல கொல்லும் நிஜங்கள்.  
அன்று ஆட்டிறைச்சியில் அநியாயங்கள் பார்த்தோம்.  அடுத்ததாய் ஆப்பிள் பழங்களில் அதிரடி சோதனை.   
                இந்திய ஆப்பிள்கள் விளைச்சலில் இளைத்ததால்  வந்திறங்கின வெளி நாட்டு ஆப்பிள்கள். பழங்கள் மட்டுமா வந்தன! அத்தனை  பழங்களையும் அழுகாமல் வைத்திருக்க மெழுகு பூசி மினுமினுக்க வைக்கும்    வித்தையும்  வந்திறங்கின. தேன் மெழுகு பூசினால் வேறொன்றும் செய்யாது. பெட்ரோலிய கழிவாய் வரும்  மெழுகை அல்லவா பூசுகிறார்கள். 
          இந்த பெட்ரோலிய கழிவு மெழுகு மெல்ல கொல்லும் இது நிஜம். வீடுகளில் ஏற்றுகின்ற மெழுகுவர்த்தி   செய்ய பயன்படும் மெழுகை மனிதன் உண்ணும் ஆப்பிள் மீது பூசுவதால், அவை குடலில் தங்கி விடும். குடல் அழற்சி உருவாகி புற்று நோயை புறப்பட்டு வர செய்யும். 
         எனவே, எச்சரிக்கை தேவை. ஆப்பிள் பழங்களை அப்படியே கடித்து சாப்பிட வேண்டாம். தோல் சீவி உண்பதே இப்போதைக்கு பாதுகாப்பு.  


                           தெரிந்ததை சொல்லி விட்டேன். தெரிவு செய்வது உங்கள் திறமை.
                          சாலையோர உணவகங்களில் சாயங்கால வேளை சாப்பிடும் விரைவு உணவு விபரீதங்களை  விரைவில் பாப்போம்.
                         நன்றி எல்லாம் நாட்டு மக்களுக்கு நாளும் இதை எடுத்து சொல்லும் பத்திரிக்கை துறை நண்பர்களுக்கே. 
Follow FOODNELLAI on Twitter

5 comments:

பாலா said...

nandri sir

உணவு உலகம் said...

இன்னும் வருகிறது. இன்றிமையாத செய்திகளுடன்.

டவுசர் பாண்டி... said...

எழுத்துப் பிழைகளை கவனியுங்கள்...

உணவு உலகம் said...

சரிங்கண்ணே

cheena (சீனா) said...

ada ஆப்பிள் சாப்பிடலாம்னா இப்படி பண்ணுராய்ங்களே - ம்ம் - வாங்கி கழுவி தோலச் சீவை அப்புறம் சாப்பிடணூமா - ம்ம்ம்ம்ம் - சரி - பாக்கலாம் - நட்புடன் சீனா