மாலை மயங்கும் வேளை.
சாலை ஓரம் உணவகங்கள்
சாரி சாரியாய் அணிவகுக்க
தொடங்கிய வேளை.
ஆணையரின் அறிவுறுத்தலில்
சாலையோர உணவகங்களை
சற்றே பார்ப்போமென்று
சக தோழர்களுடன் சென்றோம்.
மாநகர் நல அலுவலர் மரு. கலு சிவலிங்கமும்
மனமுவந்து வந்தார்.
நாங்கள் கண்ட காட்சி!
தேயிலையை தொட்டு பார்த்தால்,
தண்ணீர் விட்டு பார்த்தால்
தரம் நிறம் மங்கிய சக்கையில் செயற்கை
நிறம் ஏற்றியே நித்தம் நம்மை ஏமாற்றும் சிலர்.
அப்படியே பறிமுதல் செய்து அழித்துவிட்டோம்.
சுவையூட்டி என்று கூறி மோனோ சோடியம் க்ளுடாமேட்
வகை தொகை இன்றி துரித உணவில் தூவபடுகிறது.
செயற்கை நிறமேற்றும் செப்படி வித்தைகென
இயற்கைக்கு மாறாய் இன்னும் பல.
புற்றுக்கு புது பாதை அமைக்கும்
எத்தனையோ அவலங்கள்.
பறிமுதல், பப்ளிசிட்டி பேப்பரில், அழித்தல், அபராதம்
படித்தாவது தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
உண்ணும் முன் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து உண்ணுங்கள்.நன்றி.

2 comments:
நல்ல விஷயம்தான்...
தொடருங்கள். இது போன்ற மோசடிகளை முழுவதுமாக ஓழிக்க.. தொடர் ஆய்வுகள் தேவை.
:)
தொடரத்தான் போகிறோம். நன்றி.
Post a Comment