இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Thursday 22 April, 2010

தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்போம்.தவித்த வாய்க்கு தரமான தண்ணீர்!

       தரமான தண்ணீர் தரக்கேட்டு தவிக்கின்ற மக்கள்.
       தரம் கெட்ட தண்ணீரை நிதம் வழங்கும் வேன்கள்.

ஆறு குளங்களிலுள்ள நீர் அப்படியே குடிப்பதற்கு ஏற்றதல்ல. அவற்றில் பல வகையான அசுத்தங்கள் கலந்திருக்கும். நம் கண்ணிற்குத் தெரிபவை சில. தெரியாதவை பல. தண்ணீரில் மிதக்கும் தூசிகள், கரைந்திருக்கும் மண் படிவங்கள், மனிதக் கழிவுகள் இவையே நீரைக் கலங்கலாக்கும் காரணிகள். இவை தவிர, மண்ணிலுள்ள தாதுக்கள் தண்ணீரில் கரைந்திருக்கும். அவை தண்ணீருக்குச் சுவையளிக்கும். இந்நீரை அப்படியே பருகினால் நீரினால் பரவும் நோய்கள் நம்மைத் தாக்கும்.
காசு கொடுத்து வாங்கி 
 கவலையின்றி அருந்தும்  
மாசுபட்ட நீர்  மஞ்சள் காமாலை
 டைபாய்டு போன்ற நோய்கள் கொடுக்கும்.
மாசுபட்ட நீர்  மட்டுமல்ல  
மண்ணிலுள்ள தாதுக்களும் நீரில் கரைந்து  
மனிதர்க்கு நோய்கள் தரும்
 நைட்ரஜன் கலந்த நீர் ரத்தத்தை பாழ்படுத்தி 
 நம் உடலெங்கும் நீல நிறமாக்கும்
 இரும்பு போன்ற தாதுக்கள் அதிகமிருந்தால்,  
விரும்பி நாம் உண்ணும் உணவை  
செறிக்காதிருக்கச் செய்து 
 நம்மை செயலிழக்கச்செய்யும்.  
புளுரைட் மிகுந்திருந்தால்,  
பற்களும் எலும்பும் பலமிழந்து போகும்

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், உணவுக்கலப்பட தடைச்சட்டத்தில், பாக்கட் குடிநீருக்கு ஐம்பத்தொரு வகை ஆய்வுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது

       முத்திரை பெற இத்தனை கஷ்டங்களா
     இத்திரை அகற்ற எத்தர்கள் கண்டுபிடித்தனர்  
  மூலிகைத் தண்ணீர்.
  .எஸ். தர முத்திரை வேண்டாம்.  
 ஐம்பத்தொரு வகை டெஸ்டும் வேண்டாம்.  
எச்சரிக்கை தேவை. .
இவற்றில் பல போலி
 கிணற்று நீரைப்பிடித்து  
நறுமண திரவியம் கலந்து 
 மூலிகை நீரென்று நம் 
 முன் வைக்கின்றனர்

நாம் வாங்கும் ஒவ்வொரு குடிநீர்  பாட்டிலில்-பாக்கட்டில் இருக்க வேண்டிய அடிப்படை அம்சங்கள் என்னென்ன?

    தயாரிப்பு தேதி                         பேட்ச் எண்
   .எஸ்.. தர முத்திரை         
   தயாரிப்பாளாரின் முழு விலாசம்.
   எந்த தேதி வரை பயன்படுத்த உகந்தது
       இந்திய தர அமைவனத்தின் வலைதளத்திலும், தரமுத்திரை பெற்ற நிறுவனங்களின் பட்டியல் காணலாம்.  
பார்த்து அறிந்து தரமான தண்ணீரைத் தேர்ந்தெடுத்து அருந்துவோம். தொல்லைகள் களைவோம்.
Follow FOODNELLAI on Twitter

No comments: