இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Sunday 2 May, 2010

பழங்களையும் பார்த்துச் சாப்பிடுங்க!

பழங்களையும் பார்த்துச் சாப்பிடுங்க!


· எல்லோருக்கும் எல்லா உணவும் ஏற்றுக்கொள்வதில்லை. நமக்கு ஏற்காத உணவு வகைகளில் பழங்களும் உண்டு.

· பாரம்பரியமோ, மரபணுக்களோ நம் உடலுக்கு பழங்கள் மீது ஒவ்வாமை உருவாக்கலாம்.

· வைரஸ் கிருமிகளால் உடல் நலம் பாதித்தவர்களுக்கு, பழங்களிலுள்ள “ப்ரக்டோஸ்”  (Fructose) ஒவ்வாமையை உருவாக்குகிறது.

· பழங்களிலுள்ள வேதிப்பொருட்கள் கூட ஒவ்வாமையை உருவாக்கலாம்.

· மழைக் காலங்களில், புளிப்புச்சுவையுள்ள, “சிட்ரஸ்” அதிகமுள்ள திராட்சை போன்ற பழங்களைத் தவிர்க்க வேண்டும்.

· பழங்கள் மீதுள்ள பூச்சிக்கொல்லி மருந்து படிவங்களும், விளைச்சலை ஊக்குவிக்கத் தெளிக்கப்படும் வேதிப்பொருட்களும் கூட ஒவ்வாமையை உருவாக்கலாம்.

· பழ ஒவ்வாமை, அhpப்பு, தொண்டை வீக்கம், உடலில் தடிப்புகள், தோலில் சிவப்பு நிறம், வயிற்றுப்போக்கு, ஆஸ்த்துமா எனப் பல்வேறு நோய் அறிகுறிகள் உருவாக்கிடும். அதை உதாசீனப்படுத்தினால், மரணம் சம்பவிக்கவும் நேரலாம்.

· ஒவ்வாமை உருவாக்கும் பழங்களை உண்ணாதிருத்தலே நலம்.

புளிக்கும் பழங்கள் அளிக்கும் நன்மைகள்.


· சிட்ரஸ் நிறைந்த பழங்கள் சிறுநீரகக்கற்கள் உருவாவதை தடுக்கும்.

· எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற பழங்களில் சிட்ரஸ் சத்து அதிகமிருக்கும்.

· நாம் உண்ணும் உணவில் உள்ள உப்பு, கால்சியம், புரோட்டின் ஆகியவற்றின் பாதிப்பிலிருந்து நாம் விடுபட எலுமிச்சை சாறு உதவும்.

· நாம் உணவுடன் சேர்க்கும் உப்பிலிருந்துதான், உடலில் கால்சியம் சேருகிறது.

· அத்தகைய கால்சியம்தான், நம் உடலில் சிறுசீரகக் கல் உருவாக வழிவகுக்கிறது.

· எனவே, லெமன் டீ அருந்துவது, உப்பினால் உருவாகும் உபாதையிலிருந்து உங்களை அது காக்கும் உறுதி.

பற்களைப் பாதுகாக்க பச்சைத்தேயிலை வடிநீர்.

· பச்சைத்தேயிலையில் உள்ள 'கேடசின்ஸ்' மூலக்கூறுகள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை. பற்களைத்தாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போரிடும் தன்மை கொண்டவை அவை.

· பச்சைத்தேயிலை வடிநீர்  குடிப்பதற்கும் ஒரு பக்குவம் இருக்கிறது. சர்க்கரை கலக்காத பச்சைத்தேயிலை வடிநீர் கொடுக்கும் பலன்கள் அதிகம்.

· பச்சைத்தேயிலை வடிநீர் குடிப்பதால் பற்கள் பலப்படும். கிருமித்தொற்று தடுக்கப்படும்.

· பச்சைத்தேயிலை வடிநீரில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி, நம் உடலிலுள்ள செல்கள் இறப்பைத் தடுக்கும். வயிற்றுப்பொருமலை வராமல் காக்கும்.

வயிற்றுப்பொருமலும், செல்கள் இறப்பும் தடுக்கப்பட்டால், புற்றுநோய் மற்றும் டயாபடிஸ் வருமுன் காக்கலாம்.
Follow FOODNELLAI on Twitter

No comments: