இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Thursday 6 May, 2010

கவலை தீர கடலை போடுங்க!

கவலை தீர கடலை போடுங்க!


        அடிக்கடி பயணப்படுபவரா? பயணக்களைப்பு     தெரியாமல் இருக்கவும், அலுப்பு தட்டாமல் இருக்கவும் அப்பப்ப பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றைச் சுவைக்கலாம்.
         பஸ்ஸில் பயணிக்கும்போது சிலருக்கு வாந்தி வரும். அத்தகையவர்கள், ஜன்னலோரம் கதவைத் திறந்து வைத்து பயணித்தல் பலன் தரும். அதே போல், இஞ்சியும் இதம் தரும்.
        இஞ்சி மிட்டாய், இஞ்சித்துண்டு போன்றவை பயணத்தின்போது பலன் மிகக் கொடுக்கும். இஞ்சியுடன் கூடிய தேநீர்  இனிமை தரும்.
        வாந்தி வந்து அவதிப்படுபவர்கள், முக்கால் வயிற்றுக்கு மட்டுமே உணவு உண்ணவேண்டும்.
        பயணத்தின்போது, சிறிதளவில் பாதாம், பிஸ்தா, முந்திரி  போன்றவை எடுத்துச்சென்று திண்பது பயணக்களைப்பையும், பசியையும் போக்கும்.
        பஸ்ஸின் பின்புறம் பயணிக்கும்போது அதிக அளவில் குலுங்கும். எனவே, பஸ்ஸின் முன் பாதியில் பயணிப்பது வாந்தி வருவதைக் குறைக்கும்.
        பஸ்ஸில் பயணிக்கும்போது, காலியாக உள்ள வயிற்றைக்காக்க, கடலை போடுங்க!
Follow FOODNELLAI on Twitter

4 comments:

ப.கந்தசாமி said...

நல்ல தகவல்கள்.

ராம்ஜி_யாஹூ said...

பயனுள்ள பதிவு.
இந்த பதிவைப் படித்து கொண்டு இருக்கும் பொது, கலைஞர் தொலைக்கட்சியில் செய்தி, நெல்லை மாநகரில் உணவு விடுதிகளில் சோதனை. உங்களின் பேட்டி, டவுனில் இரண்டு கடைகள் சீல் வைப்பு, அஜினமோட்டோ செயற்கை கலர் பொடிகள் பறிமுதல் அழிப்பு.

உணவு உலகம் said...

நன்றி டாக்டர் ஐயா.

உணவு உலகம் said...

தொடரும் ரெய்டுகள்
தொல்லை தரும் தாதாக்கள்
நெல்லையிலும் காலாவதி
உணவு பொருட்கள்.
நெஞ்சமெலாம் பதறுது
நிதம் அதை உண்பவர்
நிலை எண்ணி.
ராம்ஜி சார்,
உங்கள் ஊக்குவிப்பிற்கு நன்றி.
என்றும் தொடரும்
எங்களின் அதிரடி.