இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday, 11 May, 2010

படம் பார்க்கும்போது பாப்கார்ன் கொறிப்பவரா?


படம் பார்க்கும்போது பாப்கார்ன் கொறிப்பவரா?
   தியேட்டரோ, வீடோ, திரைப்படமோ, திகில் தொடரோ,
   திண்பதற்கு உங்கள் அருகில் பாப்கார்ன் உண்டா?
    பார்த்து சாப்பிடுங்க பாப்கார்னை!
    பக்க விளைவுகள் பக்காவாய் உண்டு!
    பாப்கார்னுடன் ஒரு சாஃப்ட் டிரிங்ஸ்
    பட படவென ஏறிடும் பல்ஸ் ரேட்!
    அதிகமில்லை ஜென்டில்மேன் 1600 கலோரிகள்
    அதிலிருந்து கிடைக்கும் உங்களுக்கே!
    அதைவிடக் கொடுமை 60கிராம் கெட்ட கொழுப்பும்
    இலவச இணைப்பாய் இணைந்து வரும்.
    பாப்கார்ன் பொரிக்கப் பயன்படுத்தும்
    எண்ணெயிலிருந்து எடுத்துக்கொள்ளும் கெட்ட கொழுப்பு.
    பாப்கார்னுடன் பயன்படுத்தும் உப்பிலிருக்கும் 
    சோடியம் இரத்தக் கொதிப்பை ஏற்றிவிடும்.
     இதைவிடக் கொடுமை பாக்கட்டில் குறிப்பிட்டுள்ள
     அளவைவிட கலோரிகள் அதிகமிருக்கும்.
     எனவே, படம் பார்க்கும்போது பாப்கார்ன் 
     கொறிப்பதை  தவிர்த்தல் நலம்.

Follow FOODNELLAI on Twitter

No comments: