உறித்த கோழிகள்.
உறித்த கோழியாய், முடி உதிர்த்து நிற்கும் கோழியைப் பார்த்திருக்கிறீர்களா?
மனிதனின் பேராசைக்காக, மரபணு மாற்றம் செய்யப்பட்ட கோழிகளே அவை.
கறிக்கோழியை தோலுரித்து, அதன் முடிகளை நீக்குவதே கடினம். இதற்கென மனிதன் மாற்றம் செய்தான், கோழியின் மரபணுவில். கிடைத்தன, உறித்த கோழிகளாய் உலா வரும் மரபணு மாறிய கோழிகள். முடிகள் அதன் உடலில் வளராது. அதனால் சமைப்பது எளிது.
மனிதா உன் ஆசைக்கு அளவேது?
கோழியில் கறி அதிகமிருக்க வேண்டும். அதற்கென்றோர் மரபணு மாற்றம். அந்தக் கறியும் மிருதுவாய் இருக்க வேண்டும். மேலும் ஒரு மரபணுமாற்றம். எலும்புகள் பல்லை உடைக்கக்கூடாது. அதற்கும் மரபணுவில் மாற்றம். கோழி வளர்கையில், செயற்கையாய் எலும்பு தேய்வு ஏற்படுத்த ஏற்றிடுவார் மருந்தொன்றை. எலும்பு, கோழியின் உடலில் வளரும். ஆனால், இறுகாது. மென்று தின்றிட, மிருதுவாய் இருந்திடும்.
வந்து விட்டது கோழி முட்டையிலும் வண்ண நிறங்களின் ஜாலங்கள். மரபணு மாற்றம் செய்து வந்து விட்டது, வண்ண வண்ண முட்டைகள், இப்போது நகரங்களில், எளிதில் பரவிவிடும் சிறு கிராமங்களுக்கும்.
என்ன இவற்றின் பாதிப்புகள்? மரபணு மாற்றத்தால், அதை உண்டு மகிழ்வோரின் மரபணுக்கள் மாற்றமடையும் என்று எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள். பெண் குழந்தைகள் விரைவில் பூப்பெய்துவதும், கர்ப்பிணிகளின் கர்ப்பம் அதிகம் கலைவதும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இத்தகைய உணவுகளை உண்பதாலே!
பத்திரிக்கைகளில் படித்து அறிந்து பகிர்ந்து கொள்கிறேன் உங்களிடம்.

No comments:
Post a Comment