இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Sunday, 30 May, 2010

இரவு உணவில் மீனைச் சேர்த்தால் இனிய தூக்கம் வரும்.

                 இரவு உணவில் மீனைச் சேர்த்தால் இனிய தூக்கம் வரும்.

        வஞ்சன மீன், பசலைக்கீரை, கொழுப்பு நீக்கிய புளிப்பில்லாத் தயிர், பீன்ஸ்- இரவு உணவில் இவற்றைச் சேர்த்தால், இனிய தூக்கம் வருமாம்.
        மெலடோனின் எனும் ஹார்மோன் தூக்கம் தொடர துணை புரிகிறது. வஞ்சன மீனிலிலுள்ள (டி.எச்.ஏ) கொழுப்பு, மெலடோனின் நம் உடலில் சுரக்க உதவுகின்றது.


        கொழுப்பு நீக்கிய புளிப்பில்லாத் தயிரிலிலுள்ள சுண்ணாம்புச்சத்தும், மக்னீசியமும் நாம் விரைவில் ஆழ்ந்து தூங்க உதவுகிறது. இவ்விரு தாதுக்கள் நம் உடலில் குறைந்தால், தூக்கத்தில் சதைப்பிடிப்பும், நிம்மதியற்ற தூக்கம் கிடைக்கவும் வழிவகுக்கின்றது.

 
        அதேபோல், பசலைக்கீரை போன்ற பச்சைக்கீரைகளிலுள்ள இரும்புச்சத்தும், நிம்மதியான தூக்கம் கிடைக்க உதவுகின்றது.

 
        தூங்கும்போது நம் உடலும் மனதும் இறுக்கம் தொலைக்கின்றன. செரடோனின் எனும் ஹார்மோன் இதற்கு உதவுகிறது. பீன்ஸ் போன்ற பருப்பு வகைகளில், விட்டமின்-பி, பி-6 மற்றும் பி-12 அதிகமிருப்பதால், செரடோனின் நம் உடலில் மிதமாய்ச் சுரக்கவும், நாம் நன்றாகத் தூங்கவும், அவை உதவுகின்றன. அண்மைய ஆய்வுகளில், தூக்கமின்மையால் அவதிப்படுவோருக்கு தூக்கம் கிடைக்க, பி-விட்டமின்கள் பெரிதும் உதவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
        எனவே, இரவு உணவில் மீனைச் சேர்த்தால் இனிய தூக்கம் வரும்.
Follow FOODNELLAI on Twitter

6 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை ..... நல்ல தகவல்

தொடர்ந்து எழுத எங்கள் வாழ்த்துக்கள்

FOOD said...

Thanks a Lot.

prabhadamu said...

அருமை ..... நல்ல தகவல்.


வாழ்த்துக்கள் நண்பரே.

FOOD said...

THANKS FOR UR CONTINUED WISHES AND COMMENTS.

sakthi said...

people are going to fastfood and suffering a lot including the lose of sleeping.now it is very useful to all.thank you -indhumathy.s.

FOOD said...

Thanks for Ur valuable comment