இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Wednesday 2 June, 2010

புகையில்லா புகையிலை.


    புகையில்லா புகையிலை.
          உலகம் முழுவதும் புகையிலை எதிர்ப்பு தினம் கொண்டாடும் நாள் மே-31. உலக சுகாதார நிறுவனம், 1987ல்  துவக்கிய இயக்கம். தொடர்ந்து நடைபெறுகிறது. உலகளவில் நிகழும் இறப்புக்களில், இரத்தக்கொதிப்பிற்கு முதலிடம். அடுத்து நிற்பது புகையிலையால் வரும் புற்று நோய். உலகில் நிகழும் இறப்புக்களில், பத்தில் ஒன்று புகையிலை தரும் புற்று நோயால் நிகழ்கிறது
           இந்த ஆண்டின் விசேஷம் என்னவெனில், வளர் இளம் பெண்களையும்  மகளிரையும்  சிறப்புக் கவனம் செலுத்தி அவர்களை புகையிலை பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதேயாகும்..
           புகை உருவாக்கும் புகையிலை ஒருபுறம். புகையில்லா புகையிலை மறுபுறம். புகையில்லா புகையிலையில் இருவகை. மூக்குப்பொடியென்று ஒன்று, மெல்லும் புகையிலையென்று ஒன்று.
           புகையிலையில், புற்று நோய் உருவாக்கும் 28 வகையான கராணிகள் உள்ளன. புகையிலை வளரும் போதும் பதப்படுத்தப்படும் போதும் உருவாகும் நைட்ரசோமைன்கள் புற்றுநோய் உருவாக்கும் காரணிகளாகின்றன.
           புகையிலை அனைத்திலும் நிகோட்டின் எனும் நச்சுப்பொருள் உள்ளது. சிகரெட் போன்ற புகையிலை பொருட்களிலிருந்து கிடைக்கும் நிகோட்டினை விட, மெல்லும் வகை புகையிலையிலிருந்து 3 முதல் 4 மடங்கு அதிக நிகோட்டின் மெல்லும் வகை புகையிலையிலிருந்து கிடைக்கின்றது. மெல்லும் புகையிலையிலிருந்து, நிகோட்டின் மிக மெதுவாகக் கிடைக்கும் . ஆனால், இரத்தத்தில் கலந்த பின், நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.
              புகையிலை பயன்படுத்துவதால், உதடு, கன்னம், ஈறு, நாக்கு என வாயின் அத்தனை பகுதிகளும் புற்றுநோய் தாக்கும் அபாயத்திற்குள் வந்துவிடுகின்றன. சிகரெட் போன்ற புகையிலை பொருட்களை விட, புகையில்லா மெல்லும் புகையிலையை ஆண்கள் அதிலும் சிறுவயதினர்(18 முதல் 25 வயதில்) அதிகம் பயன்படுத்துகின்றனா;.
       குறைந்த அளவு நிகோட்டின் மற்றும் தார்  உள்ள சிகரெட் பிடித்தால், புகையினால் நமக்கு பகையில்லையென்று எண்ணுகின்றனர். அது முற்றிலும் தவறாகும். குறைந்த பட்சம் நாளொன்றிற்கு நான்கு சிகரெட் பிடித்தால் போதும், இதய நோய்களுக்கும், இள வயது இறப்பிற்கும இடமளிக்கும்.
           ஹெர்பல் சிகரெட்கள் பாதுகாப்பானதா? நிகோட்டின் இவ்வகை சிகரெட்களில் இல்லையென்றாலும், அவற்றிலிருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைடு மற்றும் தார் போன்றவை உடல் நலத்திற்கு ஊறு விளைவிப்பவையே. ஃபில்டர் சிகரெட் நிலைமையும் இதேதான். எனவே, உலகில் நல்ல சிகரெட் என்று ஒன்று கிடையவே கிடையாது.
  •     உலக சுகாதார நிறுவனத்தின் அண்மைய ஆய்வில் கிடைத்த தகவல்:
  •      இந்தியாவில் பள்ளி மாணவர்களில் 14 சதவிகிதம்  பேர்                            புகை   பிடிக்கும்     பழக்கம் கொண்டுள்ளனர்.
  •        மாணவிகள் பங்களிப்பு சிறிது குறைவு - 8 சதவிகிதம்.
  • · புகைக்கும் மாணவர்களில் 5ல் ஒருவர் தனது வீட்டிலுள்ள சொந்தங்களைப் பார்த்து பழகியுள்ளனர். 3ல் ஒருவர், வெளியாட்களைப் பார்த்து பழகியுள்ளனர்.
  •  இம்மாணவர்களில் 24 சதவிகிதத்தினரும், மாணவிகளில் 13 சதவிகிதத்தினரும், புகை பிடிப்பதால், தங்கள் நட்பு வட்டம் பெருகுவதாகத் தெரிவித்துள்ளனர் .
  • இம்மாணவர்களில் 21 சதவிகிதத்தினரும், மாணவிகளில் 16 சதவிகிதத்தினரும், புகை பிடிப்பதால், தங்கள் ஸ்டைல் அதிகரித்து, மற்றவர்களைக் கவர்வதாகத் தெரிவித்துள்ளனர்.
  •  ஆறுதலான செய்தியொன்று: புகை பிடிப்பவர்களில் 3ல் 2 நபர்கள் புகைப்பதைக் கைவிடும் நினைப்புடன் உள்ளனர்.
  •  புகை பிடிப்பதால் புற்று நோய் வரும். எத்தனை பிடித்தால் புற்று நோய் வரும்? அண்மைய ஆய்வின் முடிவு: 15 சிகரெட் போதுமென்கின்றது.
  •                                     
           புகையிலை ஒழிப்போம். புதிய சமுதாயம் படைப்போம்.

Follow FOODNELLAI on Twitter

No comments: