உணவில் கலப்படத்தை ஒழித்துக்கட்ட அரசின் அதிரடி நடவடிக்கைகள்.
உணவில் கலப்படத்தை ஒழிக்க, மத்திய மாநில அரசுகள் பல உறுதியான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. சமீபத்தில், காலாவதியான உணவுப் பொருள் விற்பனை செய்த பல கடைகள் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகள் நாம் அனைவரும் அறிந்ததே. உணவுப்பொருளில் மட்டுமல்ல, உயிர் காக்கும் மருந்திலும் நயவஞ்சகர்கள் போலியானவற்றை உலவவிட்டனர். அரசு எடுத்த பல உறுதியான நடவடிக்கைகள் அவற்றை ஒழிக்க உதவின.
உண்ணும் உணவிலும், உயிர்காக்கும் மருந்திலும், போலிகளைப் புழக்கத்தில் விடும் புல்லுருவிகளைப் புடைத்தெடுக்கவும், நல்ல உணவுப்பொருட்களை நாட்டு மக்களுக்கு வழங்கிடவும், உயிர்காக்கும் மருந்துகளை உன்னதமாய்க் கொடுத்திடவும், உணவுக்கலப்படத்தைத் தடுக்கும் துறையையும், மருந்துக்கட்டுப்பாட்டுப் பிரிவையும் இணைத்து, தமிழ்நாட்டில், ஒரு IAS அதிகாரி தலைமையில், உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு ஆணையரகம் அமைத்திட அரசு ஆக்கபூர்வ நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அது குறித்து, 05.06.2010ந்தேதிய “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதழில் வந்துள்ள செய்தியிது:
நன்றி : THE TIMES OF INDIA,CHENNAI.

3 comments:
We are waiting and expecting for that golden day. By S.Narayanan Food Inspector Sattur Municipality
Nambikkaigal veen povathillai, Narayanan.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்மூலம் எங்களது கடமையை சரிவர செய்ய தயாராக உள்ளோம்.
Post a Comment