இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday 15 June, 2010

சோயா உண்போம் சோகம் தவிர்ப்போம்

சோயா உண்போம் சோகம் தவிர்ப்போம் -கொழுப்பைக்குறைக்கும் சோயா


    நாற்பதைக் கடந்தால் பெண்களுக்கு மெனோபாஸ் தொல்லைகள் அதிகம். ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்கள் மன அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை பெண்களுக்கு உருவாக்கும். இதய நோய், இனிப்பு நோய் இன்முகம் காட்டும். ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் இயல்பாய்க் குறைந்துவிடுவதே இத்தகைய இன்னல்களுக்கு காரணமாகும்.
    ஈஸ்ட்ரோஜனை ஈடுகட்ட சோயாவில் அதற்கு ஈடான பொருட்கள் இருப்பதாக அமெரிக்க  அலபாமா பல்கலைக்கழக மருத்துவ பிரிவின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்கு நாற்பது வயதைக்கடந்த ஆசியாவைச்சா
ர்ந்த கருப்பினப் பெண்களும், ஐரோப்பாவைச்சார்ந்த வௌ;ளையினப்பெண்களும் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்ளில், ஆசியப்பெண்களுக்கு, தொடர்ந்து சில நாட்கள், சோயா கலந்த உணவு கொடுக்கப்பட்டு வந்தது. அதன்பின்னர், அவர்களின் எடையைப்பார்தபோது, ஆசியப்பெண்கள், ஐரோப்பிய பெண்களைவிட இரு மடங்குக்கும் மேலாக எடை குறைந்திருந்தது தெரியவந்தது.
    சோயாவிலுள்ள ஈஸ்ட்ரோஜெனிற்கு இணையான பொருட்களே இதற்கு காரணமென்பது அவ
ர்கள் கண்டுபிடிப்பு. மேலும், சோயா உணவை அதிகம்          சேர்ப்பவர்களின் அடிவயிற்றுக்கொழுப்பு விரைவில் கரைந்துவிடுகிறது. சோயா உண்போம். சோகம் தவிர்ப்போம்.
Follow FOODNELLAI on Twitter

2 comments:

ராம்ஜி_யாஹூ said...

how about soya milk,

is it soya beans vegetable in your post picture.

How to eat, raw soya or soya oil or soya milk coffee.Pls advise

உணவு உலகம் said...

சோயாவின் படம்தான் நீங்கள் பார்ப்பது.சோயா கலந்த உணவு உண்ண வேண்டும் என்பதுதான் சொல்லியுள்ள கருத்து. நன்றி.