இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Sunday 20 June, 2010

திண்பண்டங்கள் தயாரிப்பில் திகில் அனுபவங்கள்.


தின்பண்டம் தித்திக்கும்!
                          குடியிருப்பு பகுதியில் குடிசை தொழில் என்று கூறி,அண்டிதோடு எரித்து,அதில் வரும் புகையினால்,  அப்பகுதியில் குடியிருப்போருக்கு, அல்லல் தினம் கொடுத்து வந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றை, ஆய்வு செய்து புகையினால், அருகில் குடியிருப்போருக்கு சுவாச கோளாறுகள் வருமென்று, குறைகள் களைய அறிவிப்பு  அனுப்பினோம். குறைகள் களைய மனமில்லை.
                           குற்றங்கள் மட்டும் தொடர்ந்தன. 
                        எப்படி வேண்டுமானாலும் தயாரிப்போம். எங்களை கேட்க, எங்கள் நிறுவனத்தை ஆய்வு செய்ய அருகதை உண்டா உங்களுக்கு? இதுதான் கிடைத்த பதில். சளைக்கவில்லை நிர்வாகமும். குழு ஒன்று அமைத்து அறிக்கை பெற்றது.  
மூன்று முறை விசாரணைக்கு வர சொல்லி, அவர் தரப்பு நியாயங்கள் ஏதேனும் இருந்தால் எடுத்து சொல்ல அழைத்தோம். எடுத்து சொல்ல வரவில்லை. 
                         தொழிலை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது நிர்வாகம். தொடர்ந்து நடத்தியதால், மூடி சீல் வைக்கப்பட்டது மாலை நாலு மணியளவில். பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில்.

                                                 எங்கள் பணி தித்திக்குமா?
                               அன்றிரவே ஆரம்பித்தன பிரச்சனைகள். சீலிட்ட வீட்டிற்குள் இறக்கி விடப்பட்டனர்  இரு நபர்கள்.  தணிந்த வீடுகள் தொடர்ந்து இருந்ததால்,   பூட்டிய வீட்டிற்குள் புகுந்துவிட்ட புண்ணியவான்கள்.    அத்தனை பேரிடமும் அவசரமாய் சொன்னார்கள்-ஆளிருந்த வீட்டை சீலிட்டுவிட்டதாக. 
                         காவல் துறை உதவியுடன், கயவர்களை, சீலுடைத்து வெளியேற்றினோம், இரவு மணி ஒன்றானது.  இதற்குள் ஆயிரம்  மிரட்டல்கள்.இன்ன பிற. திறந்து விட்டு ஆட்களை வெளியேற்றி, மீண்டும் சீல் வைத்தோம்.
                                

Follow FOODNELLAI on Twitter

5 comments:

seethag said...

எல்லாரும் எந்னாவோ எழுதும்போது நீங்கள் எழுதுவது ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது. உணவு தயாரிப்பில் நேர்மையாக இருக்க மிகுந்த திறன் வேண்டும்

Easakimuthu said...

All the best sir , unagala mathi ri ellarum nermai ya eruintha roomba nalla eruku,
i am also from tveli by M.Easakimuthu 0096895123756

ராம்ஜி_யாஹூ said...

Nice

உணவு உலகம் said...

வந்து வாசித்து வாக்களித்தோருக்கும், வாழ்த்தியவர்களுக்கும் மிக்க நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : செல்வி காளிமுத்து அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என் மன வானில்

வலைச்சர தள இணைப்பு : புதனின் புத்திரர்கள்