உணவு பொருள்களில், உயிரை குடிக்கும் கலப்படங்கள் நீக்கமற நிறைந்து காணப்பட்டதால், தொடர்ந்து ஆய்வுகள், தொய்வின்றி செய்து வரும் உணவு ஆய்வாளர்கள் பல மாநிலங்களில் பகுதி நேர பணியாய், உணவு ஆய்வாளர் பணி செய்து வந்தனர்.
தொல்லைகள் களைவதில், நேர எல்லைகள் கூடாதென்று கருதிய மத்திய அரசு, ஏற்கனவே அமுலில் இருக்கும் உணவு கலப்பட தடை சட்டத்தை அடிப்படையாக கொண்டு, புதிய உணவு பாதுகாப்பு சட்டத்தை உருவாக்கியது.
புதிய சட்டத்தில், உணவு ஆய்வாளர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் என அழைக்கபடுவார்கள். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பணி முழு நேர பணியாக முழுமை பெறும். முத்தான இச்சட்டத்தில், சாதாரண குற்றங்களுக்கு, அறிவுரை மற்றும் எச்சரிக்கை மூலம் தவறு செய்பவர்கள் திருந்த வாய்ப்பு அளிக்கப்படும். அப்படியும் திருந்தாவிட்டால், அதிக பட்ச தண்டனையும் உண்டு. பல லட்சங்கள்அபராதங்கள் விதிப்பதற்கும் விதிகளில் இடமுமுண்டு.
அத்தனையும் அழகாக அமுல் படுத்த, நம் அனைவருக்கும் இத்திங்களில் பயிற்சி வகுப்புமுண்டு. தென்மாநிலங்களில் பணிபுரியும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு, சென்னையில் இம்மாதம் 26 முதல் 30 வரை, பயிற்சி அளிக்கும் பயிற்றுனர்களுக்கான பயிற்சி ஆரம்பம். அதை தொடர்ந்து, அனைவரும் பயிற்சி எடுத்து, அவசியமான இச்சட்டத்தை அமுல் படுத்த தயாராவோம்.
மேலும் விபரங்களுக்கு:
http://www.fssai.gov.in/website/Outreach/Training.aspx
என்ற வலைத்தளத்தில் விபரங்கள் தெரிந்து கொள்ளலாம். மீண்டும் சந்திப்போம்.

No comments:
Post a Comment