இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Wednesday 7 July, 2010

சுத்தம் சோறு போடும்.

                       
                                                சுத்தம் சோறு போடும்.
                        நம் வீட்டில் சேரும் குப்பையை எதிர் வீட்டு வாசலில் கொட்டுவது நாம் அன்றாடம் செய்யும் செயல். வீதியில் நாம் கொட்டும் குப்பையை அள்ள ஒரு ஜீவன் தெருவில் வருவதை பார்த்திருக்கிறோம். என்றாவது அவர் படும் சிரமம் பார்த்ததுண்டா? 
                           சரி, அவர் எடுத்து செல்லும் குப்பை என்னவாகிறது?
                       குப்பை என்ற சொல் குதர்க்கமாய் இருப்பதால், திடக்கழிவு என்றதற்கு திருநாமம் சூட்டப்பட்டது. வீட்டில் சேரும் திடக்கழிவை, மக்கும் குப்பை என்றும், மக்காத குப்பை என்றும் இருவிதமாய்ப் பிரித்து, வருகின்ற பணியாளாரிடம் கொடுத்தால், மக்காத குப்பையிலிருந்து, மறு சுழற்சிக்குப் பயன்படும் பொருட்களைப் பிரித்தெடுப்பது சுலபமாகும். 



                                 வீட்டில் உருவாகும் காய்கறிக்கழிவுகளை வீட்டுத் தோட்டம் போட்டு, வீணாய்ப்போவதை பணமாய் மாற்றலாம்.
                                      
                                வீட்டில் உருவாகும் திடக்கழிவு வீதியில் எறியப்பட்டால், வீதி கூட்டும் பணியாளரால் சேகரிக்கப்பட்டு லாரியில் ஏற்றப்படும்

                                  அந்த லாரி உரக்கிடங்கிற்குச் செல்லும். அங்கு ஈக்கள் உருவாவதைத் தடுக்க, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு கொட்டப்படும்.


                              இங்கே மலைபோல் குவிந்து கிடப்பதைப் பாh;த்தால், பெரும் மலைப்பாய் இருக்கும். அவையனைத்தும் நகர்ப்புறத்தில் சேகரிக்கப்பட்ட திடக்கழிவுதான் - வேறொன்றுமில்லை.
                           இந்த திடக்கழிவை ஆறு மாதங்கள் மக்க விட்டு, சலித்தால் கிடைக்கும் உரத்தில், மரம், செடி, கொடி வளர்த்தால் மண்ணும் பொன்னாகும். மக்காத குப்பையைப் பிரிக்காதிருந்தால், உரம் தயாரிக்க உத்தரவாதமில்லை.   
            
                      இதோ நீங்கள் பார்ப்பது, சோலையல்ல. திடக்கழிவிலிருந்து வெளியாகும் வாயுக்களால் சுற்றுப்புறம் மாசு படுவதைத் தடுக்கும் மண்ணிண் சுவாசப்பைகள் - மரங்கள். கலவை உரக்கிடங்கைச் சுற்றி நடப்பட்டுள்ள மரங்கள், சேர்த்து வைத்துள்ள திடக்கழிவு, மக்களின் கண்களில் படாதிருக்க உதவுவதுடன், மாசற்ற காற்றையும் வழங்குகின்றன.     
                        பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்தெடுத்தால் அவற்றை சிமெண்ட் ஆலையில் ரிபொருளாய்ப் பயன்படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்தால், அடுத்த தலைமுறையின் வாழ்நாள் குறைந்துவிடும். அனைவருக்கும், அன்னை பூமி விடுக்கும் அன்பான எச்சரிக்கை இது
                                    எனவே, பசுமை உலகம் படைக்கப் பாடுபடுவோம். உலகைக் காக்க ஒன்றுபடுவோம்.  
              நாங்கள் தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். நீங்களும் உங்கள் பங்குக்கு ஒத்துழைத்தால், சுத்தம் நிதம் சோறு போடும்.

                               நாளை, நெல்லை நகரமெங்கும் "மாநகர தூய்மை முகாம்" நடைபெற உள்ளது. நாமும் கலந்து கொண்டு நாளைய சந்ததிக்கு நன்மை செய்வோம்.



        
Follow FOODNELLAI on Twitter

7 comments:

Mahi_Granny said...

தொடர்ந்து எழுதுங்கள் தம்பி . வாழ்த்துக்கள்.

http://rkguru.blogspot.com/ said...

சுத்தம் சோறு போதும்தான். நல்ல பதிவு....வாழ்த்துகள்

jothi said...

உங்களின் சிறப்பான இந்த பணி தொடரட்டும். வாழ்த்துகள்

raja said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

உணவு உலகம் said...

வந்து வாழ்த்தியோர் அனைவருக்கும் நன்றி. நேற்றைய முகாம் வெகு சிறப்பாய் நடைபெற்றது. பல தொண்டு நிறுவனகள், வங்கிகள் மனமுவந்து பங்குபெற்றனர். இன்று முதல், இந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதில்லை என்றோர் உறுதி எடுத்தால், நாளை நம் சந்ததி நம்மை வாழ்த்தும். நன்றி.

M.Mani said...

சுத்தம் சோறு போடும் என்று தெரிந்தும் ஏன் நம் மக்கள் அதனைப் பின்பற்றுவதில்லை? பேருந்தில், நடந்து செல்லும்போது பின்பக்கம் இருப்பவர்களைப்பற்றிய எண்ணமே இல்லாமல் எச்சில் துப்புவது- போன்றவை படித்தவர்களும் செய்யும்போது நம்மக்கள் என்று திருந்துவர் என்று எரிச்சல்பட மட்டுமே முடிகிறது. துாய்மையை கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மட்டும்தான் காணமுடிகிறது.

மா.மணி

உணவு உலகம் said...

நம்மை பார்த்து அடுத்தவர் ஏங்கும் காலம் விரைவில் வரும். அதற்கு நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம் வாரீர். நன்றி.