இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Saturday 17 July, 2010

பீர் குடித்தால் உற்சாகம் பீறிடுதாம்.

                                        பீர்  குடித்தால் உற்சாகம் பீறிடுதாம்.

                             குடி  குடியைக் கெடுக்கும்.
             குடிபழக்கம் குடும்பத்தை கெடுக்கும்.
 


              மதுபான பிரியர்களின் மனதைக்குளிர்விக்கும் மகிழ்ச்சியான செய்தியிது. அண்மைய ஆராய்ச்சி ஒன்றின் முடிவிது. மதுபானங்களிலேயே,
“உடலுக்கு உகந்ததென பீரைக் கூறலாம். அளவாய்ப் பீரைக்குடித்தால், அளவிலா இன்பமுண்டு. அதுவே, அளவிற்கு மிஞ்சினால், சொல்லொண்ணாத் துயரைத்தரும்”, என்பது அந்த ஆராய்ச்சியின் முடிவு.
                         மதுபானப்பிரியர்கள் மத்தியில், பீரென்றால் சற்றே தரம் தாழ்ந்ததென்றோர்  எண்ணம் உண்டு. இதை பெண்களின் பானமென்று கழிப்பவர்களுமுண்டு. பீரின் குணங்களறிந்தால், உற்சாகம் பீறிடும்.
                       பீரில், கொழுப்புச்சத்து இல்லை. பசியைத்தூண்டும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். விமல்குமார் எனும் சமூகவியலார் , “பீர்  நம் நினைவுகளுக்கும், பேச்சிற்கும் இதமளிப்பதாக”; கூறுகிறார்.
                       பீரிலுள்ள உயிர்ச்சத்து பி-6, இதய நோய்களை ஏற்படுத்தும் அமினோ அமிலங்கள் உடலில் உற்பத்தியாகாமல் தடுக்கின்றன. இரத்தநாளங்கள் இனிதே இயங்கவும், உடலும் மனதும் உற்சாகமடையவும் செய்கின்றன. பீரிலுள்ள உயிர் சத்துக்கள், சரிவிகித சம உணவை நாம் உண்ண உதவுகின்றன. பீரிலுள் நார்ச்சத்தும், சிலிக்கான் சத்தும், முதுமையில் எலும்புத்தேய்வு நோய் நம்மை அண்ட விடாமல் தடுக்கின்றன.
                         இத்தனையும் ஒரு பாட்டில் பீரை உவகையுடன் குடிப்போர்க்கே. போதை தலைகேற வேண்டுமென பீர்  பாட்டில்கள் பல உள்ளே தள்ளினால் பானை வயிறும், பல வகை நோயும் வந்து பாடாய்ப்படுத்துமுங்கோ!
குடி  குடியைக் கெடுக்கும்.
             குடிபழக்கம் குடும்பத்தை கெடுக்கும்.
Follow FOODNELLAI on Twitter

4 comments:

http://rkguru.blogspot.com/ said...

பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்டால் என்ன நியாயம் இது....நல்ல பதிவு வாழ்த்துகள்

உணவு உலகம் said...

சொல்லுறதையும் சொல்லணும்,
சுக துக்கங்களையும் சொல்லனுமுங்கோ!

NARAYANAN said...

very good.

அமைதி அப்பா said...

//போதை தலைகேற வேண்டுமென பீர் பாட்டில்கள் பல உள்ளே தள்ளினால் பானை வயிறும், பல வகை நோயும் வந்து பாடாய்ப்படுத்துமுங்கோ!//

எங்கே, இந்தச் செய்தியை சொல்லாமல் விட்டுவிட்டீர்களே என்று கவலையுடன் படித்து வந்தேன், கடைசியில் சொல்லிவிட்டீர்கள்.
நன்றி.