இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 23 July, 2010

சிறுநீரகக்கல்லை சீராக்கும் எலுமிச்சை.

                                   சிறுநீரகக்கல்லை சீராக்கும் எலுமிச்சை.

                 எலுமிச்சை முதலில் தோன்றிய இடத்திற்குரி பெருமைஇந்தியாவைச்சேரும். பல விஷக்கடிகளுக்கு அருமருந்தாகும் எலுமிச்சை, நல்லதொருகிருமிநாசினியுமாகும்.


100 கிராம் எலுமிச்சையில்:
சக்தி                                 -  29 கி.கலோரி
கொழுப்பு                        -  0.3 கிராம் 
புரதம்                              -  1.10 கிராம்
நார்ச்சத்து                    -  2.8 கிராம்                    
ர்க்கரைச்சத்து        -  2.5 கிராம்
உயிர்ச்சத்து பி-1      -  0.040 மி.கி.
உயிர்ச்சத்து பி-2      -  0.020 மி.கி.
உயிர்ச்சத்து பி-3      -  0.100 மி.கி.
உயிர்ச்சத்து பி-6      -  0.080 மி.கி;
உயிர்ச்சத்து சி          -  53.00 மி;.கி;.
சுண்ணாம்புச்சத்து   -  26.00 மி.கி.
இரும்புச்சத்து             -  0.060 மி.கி.
மக்னீசியம்                   -  8.00  மி.கி.
பொட்டாசியம்            - 138.00 மி.கி
                                அண்மைய அமெரிக்க  ஆராய்ச்சியில், எலுமிச்சைச்சாறு சிறுநீரகக் கல் உருவாகாமல் தடுப்பதில் பெரும்பங்கு வகிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எலுமிச்சையிலுள்ள சிட்ரஸ், சிறுநீரகத்தில் கல் உருவாகுவதைத் தடுக்கிறது.  புளிப்புச் சுவையுள்ள பழங்களில், ஆரஞ்சிலும், எலுமிச்சையிலும் சிட்ரஸ் சத்து சற்று அதிகமாக உள்ளது. நாம் அன்றாடம் உண்ணும் உணவில் உள்ள உப்பு, கால்சியம், புரோட்டின் ஆகியவற்றின் பாதிப்பைக் குறைக்க எலுமிச்சைச்சாறு மிகவும் உதவுகிறது. உப்பிலுள்ள கால்சியம்தான் சிறுநீரகக்கல் உருவாக பெரும்பங்கு வகிக்கிறது.
        தினசரி  4 ஸ்பூன் எலுமிச்சைச்சாறை 2 லிட்டர் தண்ணீருடன்  சேர்த்து, சிறிது சிறிதாகக் குடிக்கச் செய்தபோது, அவ்வாறு குடிப்பவர்களின் சிறுநீரகத்தில் கல் உருவாகும் வாய்ப்பு ஒரு பங்கிலிருந்து, 0.13 பங்காகக் குறைந்துள்ளது. உணவில் உப்பைக்குறைப்பதன் மூலமும், சிறுநீரகக்கல் உருவாகாமல் தடுக்கலாம்.


                        அதுமட்டுமல்ல, எலுமிச்சைச்சாறை சூடான நீரில் கலந்துகுடித்தால், வயிற்றுப்பொருமல். வாந்தி வருவதைத்தடுக்கும். மலச்சிக்கல்மறைந்து போகும். எலுமிச்சையிலுள்ள விட்டமின்-சி தோலைப்பளபளப்பாக்கும். தோலின் உள்ளிருந்து உயிரோட்டம் அளிப்பதால், முதுமைசற்றுத் தள்ளிப்போகும். முகம் முன்னிலும் பளபளப்பாகும்.


                        தொண்டையில் கிச் கிச்சா? தொடர்ந்து எலுமிச்சைச்சாறுகலந்தநீரில் வாய் கொப்பளித்து வந்தால் வந்த வழியே வைரஸ்ஓடிப்போகும். வெந்நீரில் தேனும் எலுமிச்சைச்சாறும் கலந்து தொடர்ந்துகுடித்து வந்தால், குண்டு உடம்பும் கொடி இடையாகும்.

                        உயர் இரத்த அழுத்தம், ஆஸ்த்துமா போன்றவற்றை ஓடஓடவிரட்டும். சிறுநீரைப் பெருக்குவதால், வாதநோய், மூட்டு வலிவராமல்போகும். எழுபதுக்கு மேல் எடையுள்ளவரெனில், ஒரு டம்ளர் தண்ணீரில், ஒருஎலுமிச்சம்பழத்தைப் பிழிந்து இருமுறை அருந்தலாம். அதைவிட எடைகுறைந்தவரெனில், ஒரு டம்ளர்  தண்ணீரில், பாதிஎலுமிச்சம்பழத்தைப் பிழிந்துஇருமுறை அருந்தலாம்.
                       அதைவிட  அருமை! எலுமிச்சை பழரசம் சேர்த்த தேநீர். பால் சேர்க்காத தேநீரில் சில துளிகள் எலுமிச்சம்பழ சாறு சேர்த்து அருந்தினால் அத்தனை சுவை. உடலுக்கும் நல்லது. உற்சாகமும் கூடவே வந்து சேரும்.

                            
Follow FOODNELLAI on Twitter

4 comments:

கண்ணா.. said...

அவசியமான பகிர்வு

உணவு உலகம் said...

நன்றிகள் பல நண்பரே

IKrishs said...

Vikatan varverparayil ungalthu blog idam petrulladhu!
Congrats...

உணவு உலகம் said...

தகவலுக்கு நன்றி நண்பரே. நானும் சென்று பார்த்தேன்.