இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 26 July, 2010

சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு சந்தோஷச் செய்தி.


          சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு சந்தோஷச் செய்தி.



           இனிப்பு என்றால் இனிப்பது இளஞ்சிறார்க்கு மட்டுமல்ல. அதைக் கண்டால், ஐம்பதிலும் ஆசை வரும். ர்க்கரை நோய் வந்தவர்களுக்கோ, திருமண வீட்டில் பாயாசத்தைப் பார்த்தவுடன், அருந்தாமல் பந்தியிலிருந்து எழும்பவும் மனம் வராது. எத்தனை நாள்தான் இன்சுலினை ஏற்றுவது? பாயாசம் அருந்திவிட்டு, பலவித மருந்துகளை உள்ளே தள்ளுவது? மூச்சிரைக்க மூன்று மைல் துhரம் நடந்தாலும் ரத்தத்தில் ர்ககரையின் அளவு குறையாது.
           இதோ  உங்களுக்கான இனிப்பான செய்தியிது. கரும்பிலும் இனிப்பானது, இனிப்பு நோயாளிகளை இம்சிக்காது. இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள ஸ்டீவியா என்றோர் மூலிகைச்செடி. பராகுவேயில் பயிரிடப்படும் இந்த மூலிகைச்செடியின் இலைகளைப் பறித்து காயவைத்து, இடித்து பொடியாக்கி இன்சுவைக்காய் அந்நாட்டு மக்கள் இன்றளவும் பயன்படுத்துகின்றனர். சர்க்கரையைவிட 200 மடங்கு இனிப்பானது.
           நறுமணம் மிக்க இச்செடியை நம் வீட்டுத் தோட்டத்திலும் பயிரிடலாம். 10 முதல் 32 டிகிரி  வெப்ப நிலையில் பக்குவமாய் வளரும். பராமரிப்பது மிக மிக எளிது. இதன் இலை மட்டுமல்ல, தண்டும் விதையும் இனிப்பிற்காக ஏங்கும் வாய்க்கு இனிக்கும் சர்க்கரையாகும். இதை உண்பதால் கலோரிகளில்லை. இன்னும் ஒருபடி மேலாய், இன்சுலின் சுரக்க உதவும். பக்க விளைவு பாதிப்புகளும் இல்லையென்பதால், நிச்சயம் ஒருநாள் ஸ்டீவியா நிலை கொள்ளும்.
Follow FOODNELLAI on Twitter

15 comments:

M.Mani said...

உண்மையில் நல்ல செய்தி. விரைவில் நம் நாட்டில் இச்செடி கிடைத்தால் மிக மகிழ்வோம்.
மா.மணி

ராம்ஜி_யாஹூ said...

மாணிக்கம் சொல்வதை ரிப்பீட் செய்கிறேன்

saichrisna said...

Hai Sankaralingam I am Shanthi (PFA) I am vey happy to see ur endevour. keep itup

உணவு உலகம் said...

நன்றி. நானும் அந்த நாளை வரவேற்க காத்திருக்கிறேன், ராம்ஜி யாஹூ சார்.
நன்றி சாந்தி மேடம், டெல்லியில் என்னை உயர் பயிற்சிக்கு அனுப்பிட நீங்களும், உமா மேடமும்,அப்போதைய இணை இயக்குனர் திரு. சொக்கலிங்கம் அய்யாவும் எடுத்த முயற்சிகள் வீண் போகவில்லை என்று உணர்ந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். தொடர்ந்து ப்ளாக்கை பார்த்து உங்கள் ஆலோசனைகளை கூறுங்கள்.

உணவு உலகம் said...

முதல் முத்திரை பதித்த மாணிக்கம் அய்யா நன்றி.

கை.க.சோழன் said...

miga nandru



http://siddhatamiltips.blogspot.com

கை.க.சோழன் said...

miga nandru



http://siddhatamiltips.blogspot.com

உணவு உலகம் said...

நன்றி நண்பரே.

NARAYANAN said...

CONGRATS.

அமைதி அப்பா said...

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள “ஸ்டீவியா” என்றோர் மூலிகைச்செடி.//

புதிய செய்தி,
நன்றி.

S.Lankeswaran said...

இலங்கையில் எங்கே கிடைக்கும் என்று தெரியுமா? சர்க்கை சாப்பிட்டு வருடக்கணக்காய் ஆகின்றது...

உணவு உலகம் said...

நன்றி நண்பரே. மேலும் தகவல் பெற, இந்த லிங்கில் செல்லுங்கள்.
http://www.srilankaguardian.org/2010/03/promote-stevia-cultivation-in-sri-lanka.html

sakthi said...

we are very interesting with the new message about the stevia plant.it will be very useful to all .thank you-indhumathy d/o sakthimurugan. third std.

உணவு உலகம் said...

சக்திக்கு இனிக்கும் இந்துமதியே! உன் ஆர்வத்திற்கு பாராட்டுகள்.

இராஜராஜேஸ்வரி said...

நல்ல செய்தி.