இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Sunday 1 August, 2010

கலப்பட காய்கறிகள் கலக்குது பாருங்கள்.

                                        கலப்பட காய்கறிகள் கலக்குது பாருங்கள். 

                                 சைவ உணவே சத்தென்று சாப்பிடும் சமத்து  பிள்ளைகளா நீங்கள்! பச்சை பசேலென பசுமையாக, பாத்தவுடன் பட்டென்று எடுத்து கடித்துவிட தோன்றுகிறதா? கவனம்! கலப்படம் -காய்கறியிலும் கால் பதித்து விட்டதாம். 
                                   வாழை பழங்களையும், மாம்பழங்களையும் கந்தக கல் கொண்டு பழுக்க வைத்தனர். வந்து குவிந்த வசதியினால், காசு  பணம் பார்ப்பது மட்டுமே தம் கவலை என்று காய்கறியிலும் கலப்படத்தை புகுத்தியுள்ளனர். கவனம்! 
                                    சமீபத்தில், மத்திய மக்கள் நல்வாழ்வு துறை இணை அமைச்சர் திரு. தினேஷ் திரிவேதி, "ஆக்சிடோசின் " எனும் அருமருந்து அளவின்றி காய்கறி மற்றும் பழங்களில் பயன்படுத்தபடுவதாக பகிரங்கமாய் அறிவித்து தம் வேதனையை தெரிவித்துள்ளார். "ஆக்சிடோசின்", பெண்களுக்கு கர்ப்ப காலத்தில், நஞ்சுக்கொடி வெளியேற மருத்துவர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட மருந்து. 

                                    பாகற்காய் ஜூஸ் பருகிய நபர் பட்டென்று போய்விட்டதாக செய்திகளில் காண்கிறோம். மருந்து கடைகளில் மருத்துவர் பரிந்துரையின் பேரிலேயே விற்கப்பட வேண்டிய இந்த வில்லனை, பால் மாடு வளர்போரும், காய்கறி தோட்டம் வைத்திருபோரும்  கவலை ஏதுமின்றி வாங்கி சென்று பயன்படுத்துகின்றனர். 
                             பால் கறக்கும் மாட்டில் இதை பயன்படுத்தினால், அந்த ஹார்மோன், பசு தரும் பாலிலும் கலந்து, அதை அருந்தும் மனித உடலிலும் கலந்து, சிறுமிகள் விரைவில் பூப்பெய்திடவும், கர்ப்பிணிகள் கர்ப்பம் தொலைத்திடவும் காரணிகளாய் அமைகின்றன.   
                              "ஆக்சிடோசின் " மருந்து ஏற்றிய காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடுவதால் இதய கோளாறுகள் இனிதே வந்து சேரும். நரம்புகள் பாதிப்பதால், மறதியும், மலட்டு தன்மையும்  மறக்காமல் வந்து சேரும்.
                                  அத்தகைய அருமருந்தை, காய்கறி செடிகளில் ஏற்றி, காய்கறிகள் மற்றும் பழங்கள் பச்சை பசேலென பழபழக்க பக்குவபடுத்துகின்றனர்.            
                                  மனிதா உன் பேராசைக்கு மரித்து விட்டதோ மனிதங்கள்!  உன் வீட்டிலும் ஒருவன் படுத்துவிட்டால்தான் அந்த வலி உனக்கு புரியுமென்றால், இறப்பதற்கு இங்கு மனிதர்களே இருக்க மாட்டார்கள்.

Follow FOODNELLAI on Twitter

17 comments:

prabhadamu said...

பயனுள்ள பதிவு நன்றி நண்பரே.

உணவு உலகம் said...

தங்கள் வருகைக்கு நன்றி

Chitra said...

வலைச்சரத்தில், பலாபட்டறை ஷங்கர் Sir, உங்களை அறிமுகப்படுத்தி இருப்பதை கண்டு வந்தேன். விழிப்புணர்வை தூண்டும் பயனுள்ள பதிவு. உங்கள் பணியில் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்!

உணவு உலகம் said...

நன்றி சகோதரி. நாளும் இந்த பணி தொடரும்.

cheena (சீனா) said...

அன்பின் சங்கரலிங்கம்

நல்லதொரு பணியினைத் தொண்டாக, சிறப்பாகச் செய்து வருவது பற்றி மிக்க மகிழ்ச்சி. நல்ல தொரு இடுகை.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

எறும்பு said...

Pls check this link


http://blogintamil.blogspot.com/2010/08/blog-post_04.html

உணவு உலகம் said...

நன்றி சகோதரரே. தங்களை போன்றவர்களின் நல்வாழ்த்துக்களுடன் நாளும் இப்பணி தொடரும்.

உணவு உலகம் said...

நன்றி ராஜகோபால்! சென்று பார்த்தேன். மகிழ்ச்சி.

NARAYANAN said...

sir, I am gained knowledge about the oxytocin and thankyou for this information. By S.Narayanan B.sc., Food Inspector

உணவு உலகம் said...

Thank U Narayanan.

saichrisna said...

Hai it is useful conyinue

Unknown said...

I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

உணவு உலகம் said...

நன்றி சாந்தி மேடம்.
நன்றி சுவேதா உங்களுக்கும் - அழைப்பிற்கு நன்றி.

sakthi said...

தங்களது தங்கமான கருத்துக்கள் தங்களை போலவே எனக்கு ஆசானாக அமைந்தன. அரக்க மனித இதயத்தில் நுழைந்து அப்பாவி மக்களின் உடல் நலத்தை கெடுக்கும் ஆக்சிடோசின் கல்லறைக்கு செல்வது எப்போது? அதற்க்கு உணவு ஆய்வாளராக நான் என்ன செய்ய வேண்டும்?

Radha said...

Now everybody aware of how veg & fruits cauing the problem..

Thank you very much for that.

But how should avoind that and take care of helath..that would be more benefits to erveryone..

உணவு உலகம் said...

நன்றி சக்தி. உணவு ஆய்வாளரான நாம் ஒவ்வொருவரும் விழுப்புடன் இருந்தால், நிச்சயம் நம்மால் விழிப்புணர்வை கொணர இயலும்.

உணவு உலகம் said...

Thank You for asking a wise question. First of all, the news is for enlightening the ignorant people in this subject.
We can thoroughly wash the fruits and vegetables and eat to avoid bacterial,insecticidal and fungal contamination. We should also avoid fruits attractively polished.
To escape from the ill effects of ethylene gas formed due to carbide gas ripening, we can refrigerate the suspected mangoes for 24 hours or keep them in a pot of water. There are so many tips like this, which will be appearing soon.