இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Saturday 28 August, 2010

இனிப்பை தந்து இன்னலும் தருபவர்கள்

                                 சரக்கு மட்டுமே இனிப்பு. சங்கடங்கள் தருவதே இவர்கள்  பிழைப்பு. சந்திப்பில் அன்று சக அலுவலர்களுடன் சென்று திடீர் ஆய்வு. சந்தேகங்கள் அங்கு நிஜங்களாயின. இனிப்பு மட்டுமே அவர்கள் தயாரிக்கவில்லை. இன்னல்களையும் சேர்த்தே தயாரித்து கொண்டிருந்தனர். அத்தனை அழுக்கு உடையில் - சரக்கு மாஸ்டர்கள். உடலில்,வியர்வை வழிந்தோடி, தயாரிப்புகளுக்கு தனி சுவை  சேர்த்து கொண்டிருந்தன. 
                               தீயில் வேகுவது பண்டங்கள் மட்டுமல்ல, அந்த மனிதர்களும்தான். ஆங்காங்கே அடுப்பில் எரிக்க அண்டிகொட்டை  தோடுகள். அப்படியே திறந்த நிலையில் பண்டங்கள் தயாரிக்க பயன்படும் அடிப்படை பொருட்கள். ஆங்காங்கே சிதறிக்கிடந்த மிச்சங்கள். எலிகளுக்கு இரவில் உணவாக.
                             சுவர்களில் ஒட்டடை சித்திரங்கள் ஊசலாடி கொண்டிருந்தன. தயாரித்து முடித்தவற்றை ஈக்கள் ருசி பார்த்துகொண்டிருந்தன. எண்ணெய் சட்டியில், எத்தனையோ  கழிவுகள். 
                               என்ன செய்ய? 
                         தயாரிப்பிற்கு தடை விதித்தோம். தாங்களாக முன்வந்து பூட்டினார்கள். சிக்கலை தீர்பதற்கு,சீலும் வைத்து வந்தோம். 
                             கசப்பு  மருந்துதான் கொடுத்துதான் காய்ச்சல் தீரவேண்டுமென்றால், சுவையை பற்றி சிந்திக்கலாகாது. 
                               நாளும் தொடரும் இந்த நடவடிக்கைகள். 
                               நல்ல வேளை வர வேண்டுமென்ற நம்பிக்கையுடன். 


                            
Follow FOODNELLAI on Twitter

12 comments:

RAJAMANICKAM said...

WELL DONE

உணவு உலகம் said...

THANK YOU.

Anonymous said...

தலைப்பு நன்றாக இருக்கிறது.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

இந்தியாவில் அதிகாரிகள் அனைவரும் உள சுத்தியுடனும் நேர்மையுடனும் கடமையைச் செய்ய ஆரம்பித்தால் மாற்றங்கள் வரும் என்பது என் எண்ணம்.

வாழ்த்துக்கள்..

Chitra said...

கசப்பு மருந்துதான் கொடுத்துதான் காய்ச்சல் தீரவேண்டுமென்றால், சுவையை பற்றி சிந்திக்கலாகாது.


...This is how things should be dealt in all areas. We thank you all for doing this.

NARAYANAN said...

Really very sensitive matter and I will also take care in this regard in future.

உணவு உலகம் said...

Thank You PRABU sir. Also please go through the matter.

sakthi said...

மிகவும் நன்றி.நீங்கள் செய்துள்ள மூடுவிழா, சந்தோஷத்தின் திறப்புவிழா.

உணவு உலகம் said...

அன்பு அறிவனின் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல.

உணவு உலகம் said...

நன்றி நாராயணன். நீங்களும் பல சாதனைகள் செய்து வருவதை நானறிவேன். நாடறியும் நாள் வரும்.

உணவு உலகம் said...

நன்றி சித்ரா மேடம். பாரட்ட மனம் வேண்டும். அதுவும் ரசித்து பாராட்ட அதை விட நேரமும் வேண்டும்.

உணவு உலகம் said...

நன்றி சகோதரர் சக்தி. உங்கள் வலைப்பூவில் வாச மலர்களை தூவ வேண்டுகிறேன்.