இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Sunday, 22 August, 2010

திருநெல்வேலிக்கே அல்வா!

                                        அல்வா கொடுத்த அல்வாக்கடை.

                                  அன்றொரு நாள் அல்வாக்கடைக்கு சீல் வைத்தோம். ஆறாம் மாதம் அதுபற்றி (தின்பண்டங்கள் தயாரிப்பில் திகில் அனுபவங்கள்)செய்தியும் தந்தேன்.  குடியிருக்கும் பகுதியிலே சுகாதாரத்திற்கு குந்தகம் விளைவித்ததால், ஆணையர்  எடுத்த அதிரடி நடவடிக்கை அது. அனைத்து ஊடகங்களிலும் அது பற்றிய செய்தியும் வந்தது. சுகாதாரத்தை பேணுகிறேன் என்றோ, குறைகளை நிறை செய்கிறேன் என்றோ எழுதிக்கொடுத்து, சீர்  செய்திருக்கலாம்.
                                   அப்படிச்செய்ய மனமில்லை போலும். அரசு வைத்த சீலை அவரே அப்புறப்படுத்தினார். வந்தது வில்லங்கம். வாசல்வரை சென்று விட்டோம். வழிநின்று சிலர்  தடுத்ததால், வந்து விட்டோம், வேறு வழியின்றி. 
பயமில்லை - பதுங்கித்தான் பாய வேண்டியிருந்தது.
                              


                        

                                 அரசு இயந்திரம், எவர்  இருந்தாலும், இல்லாவிட்டாலும் இயங்கிக்கொண்டுதான் இருக்குமென்பது என் கணிப்பு.
                                    அந்த நாளும் வந்தது. அதிரடியாய்ச் சென்றோம். அரசு வைத்த சீலை அப்புறப்படுத்திவிட்டு அங்கே கனஜோராய் களைகட்டிக்கொண்டிருந்தது--அல்வா தயாரிப்பு வேலை. அரசு சீல் வைத்து விட்டால், பிரச்சனை முடியும்வரை அந்தச் சொத்து அரசின் பொறுப்பிலிருக்கும். அரசு சொத்தில் அத்து மீறி உள்ளே நுழைந்திருந்தவர்களை வெளியே வரச்சொன்னால், கரண்டியும் கம்பும்தான் பறந்து வந்தது. பார்த்துக் கொண்டிருக்குமா காவல்துறை. அன்பாய் அவர்களைக் கவனித்து அருகில் நின்ற வாகனங்களில் ஏற்றினர்.
                                அரசிற்கே அல்வா கொடுக்க முயன்ற  அல்வாக்கடையை நன்றாய்ப் பூட்டி நான்கு புறமும் சீல் வைத்து நகர்ந்தோம் நாங்களுமே.
Follow FOODNELLAI on Twitter

8 comments:

ராம்ஜி_யாஹூ said...

தொடரட்டும் உங்கள் சேவை.
சாலை ஓர உணவகங்கள் (நெல்லை கோவில்பட்டி ) உங்கள் கட்டுப்பாடில் வருகிறதா

FOOD said...

நெல்லை மாநகர பகுதி மட்டுமே பார்த்து வருகிறேன். எனக்கும் அந்த பக்கம் நிறைய மன வருத்தம் உண்டு நண்பரே. விரைவில் அதற்கும் நல்ல நேரம் பிறக்கும்.

RAJAMANICKAM said...

well done. continue your service.

கண்ணா.. said...

தொடரட்டும் உங்கள் பணி...நிறைய ஐஸ் பேக்டரிகளிலும் தரமற்ற முறையில் ஐஸ் தயாரிக்கபடுவதாக நண்பர்கள் சொல்லுவார்கள்.. அதையும் கவனியுங்க்ள நன்றி :)

NARAYANAN said...

Always winner is the Act

FOOD said...

நன்றி ராஜமாணிக்கம் சார் மற்றும் நாராயணனுக்கு.
தகவலுக்கு நன்றி கண்ணா. தனி கவனம் செலுத்திகிறேன்.
செவ்வாய் நாளிதழ்களில் அடுத்த ரெய்டு செய்தி பாருங்க.
தமிழகம் முழுவதும் இன்று தண்ணீர் பாக்கெட் ரெய்டு செய்தி உண்டு.

samsundar said...

appreciate your cuts in the Halwa shop issue. congrats.
sams - FI

FOOD said...

Thanks. Have a regular visit.