இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Wednesday 25 August, 2010

தவித்த வாய்க்கு தண்ணீர்

                                   தவித்த வாய்க்கு  தண்ணீர் தருவது நம் தமிழர் மரபு. 
இன்றோ, தாகம் எடுக்கும்போது சிறுவர் முதல் பெரியவர் வரை 
 தாகம் தணிக்க     வாங்கி அருந்தும் குளிர்பான பாக்கெட்களிலும்
லாபம் ஒன்றே குறிக்கோளாய் கொண்டு மனிதர்களின் உடல் நலத்தை
காவு வாங்க துடித்திடும்  கல் நெஞ்சகாரர்களின் கயமைத்தனம்.
                                            

 
 
                                       கண்ட கண்ட தண்ணீரில் தயாரிப்பதால்,  கடும் நோய்கள் வந்து தாக்கும். 
                               கவனம் மிக தேவை. பாக்கெட்டில் அடைத்த குளிர்பானம் என்றால்,என்று தயாரித்தது?, என்னென்ன பொருட்கள் சேர்கப்பட்டுள்ள தென நிச்சயம் பார்க்கவேண்டும்.  செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்டிருந்தால், சாக்கரின் கலக்கபட்டிருந்தால் சத்தியமாய் சகல துன்பங்கள் தரும். தயங்காமல் தவிர்த்திடுவீர்.
                       இயற்கையாய் விளையும் இளநீரே இன்பம் தரும். 
                      செயற்கையை உண்டால் மிகுந்த துன்பம் வரும்.  
Follow FOODNELLAI on Twitter

8 comments:

RAJAMANICKAM said...

Excellent work. Ungal pani Sirakkattum. Vazhga Valamudan.

Chitra said...

லாபம் ஒன்றே குறிக்கோளாய் கொண்டு மனிதர்களின் உடல் நலத்தை
காவு வாங்க துடித்திடும் கல் நெஞ்சகாரர்களின் கயமைத்தனம்.

.....தாங்கள் செய்யும் வேலை, எத்தனை உயிர்களை பாதிக்கிறது, உடல்நிலையை கெடுக்கிறது என்ற அக்கறையும், வியாபாரத்தில் good ethics ம் இருந்தாலே போதுமே..... ம்ம்ம்ம்.....
மக்கள்தான், இந்த மாதிரி பொருட்களை வாங்கமால் புறக்கணிக்க வேண்டும். பின், வியாபாரம் சரியில்லை என்றால் மாறித்தானே ஆக வேண்டும்.

உணவு உலகம் said...

நன்றி ராஜமாணிக்கம் சார்.
நன்றி சகோதரி சித்ரா. புறக்கணிப்பே புண்ணியம் கட்டிக்கொள்ளும்

sakthi said...

மிக்க நன்றி. வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் இயற்கை இன்னும் எவ்வளவு நாள் இளநீரை பாதுகாத்து கொள்ளும். மண்ணின் மைந்தர்களான உணவு ஆய்வாளர்கள் தங்கள் பணியை தொய்வின்றி செய்தால் இந்தவகை கலப்படம் முற்றுபெருமா?

Vadamally said...

Migavum arumaiyana thagaval.

உணவு உலகம் said...

நன்றி சகோதரரே. நாளும் தொடரும் இப்பணி என்ற நம்பிக்கையுடன். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால்! உங்களை சுற்றி பல நெருக்கடிகள் இருக்கும் என்று தெரியும். எங்களுக்கு நம்பிக்கையும், நல்ல ஊக்கமும் தருகின்ற நேர்மையான மேல் அலுவலர்கள் இருப்பதால் நடக்கிறது. நாளை உங்களுக்கும் தீயவற்றிற்கு முற்றுபுள்ளி வைக்க வேளை வரும். உங்கள் எண்ணங்களே உங்களை மேம்படுத்தும் சக்தி.

நன்றி உங்களுக்கும் உரித்தாகுக வடமலை சார்.

NARAYANAN said...

congragulations sir

உணவு உலகம் said...

Thanx