இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Thursday, 26 August, 2010

தரங்கெட்ட தண்ணீர் - தடாலடி நடவடிக்கை.

                          தமிழகம் முழுவதும் தடாலடி நடவடிக்கை. தரங்கெட்ட தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறதா என நாள் முழுதும் சோதனை. அங்கிங்கெனாதபடி, மாநிலம் முழுவதும் மாபெரும் சோதனை. அரசின் அதிரடியால்,  கலங்கல் குடிநீர் கொடுத்தோருக்கு   அடிவயிற்றில் கலக்கம். நாங்கள்  பேருந்து நிலையம் அருகே  ஒரு கிட்டங்கியை பார்வையிட்டபோது, கழிவு நீரோடை அருகே அடுக்கி வைக்கபட்டிருந்த அறுபத்தியொரு குடிநீர் பாக்கெட் மூடைகளை கண்டோம். அப்படியே அள்ளி வந்து அழித்துவிட்டோம். வழக்குகள் எல்லாம் இவர்களுக்கு வாழைப்பழம் போலும். அந்த மனிதரிடம் கேட்டேன்- "உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு இந்த பாக்கெட்களை கொடுப்பீர்களா?"  என்று.  பஸ்ஸில் பயணிப்பவர் என்றால் படு இளப்பமோ? அடுத்த வீட்டு குழந்தைகள் அதை வாங்கித்தானே பருகுவர்! அவசர  கதியில், கடையில் அடுக்கி வைக்கபட்டிருப்பவற்றை அள்ளி செல்ல வேண்டாம். 
 
 
                               ஐ.எஸ்.ஐ. தர முத்திரை, தயாரிப்பு தேதி, எந்த தேதி வரை பயன்படுத்த உகந்தது, பாட்ச் எண் உள்ளிட்ட விபரங்களை நாம் ஒவ்வொரு பாக்கெட் செய்யப்பட்ட/ பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரிலும் பார்த்து வாங்க வேண்டும்.   அனைத்து கடைகளிலும் ஐ.எஸ்.ஐ. சான்றின் நகலையும் வைத்திருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  
                                 காசு கொடுத்து கவலைகளை வாங்காதீர்!
Follow FOODNELLAI on Twitter

7 comments:

thiru said...

உங்கள் பதிவுகள் சிலவற்றை படித்து வருகிறேன்.மனதுக்கு மிகவும் தெம்பு தருகிறது உங்கள் பணி.உங்களைப்போன்றோருக்கு ப்ரச்சினைகளும் அதிகம். ஆனால் உஙளால் தான் பொது மக்களுக்கு நன்மை.

வாழ்த்துக்கள்.

FOOD said...

Thanks. This is a humble service to the community.

இளங்கோ said...

உங்கள் தளத்தை இன்றுதான் பார்க்கிறேன்.
தெருவோரங்களில் முளைத்து கிடக்கும் தள்ளு வண்டிக் கடைகள், மாசு மிகுந்த உணவுகளை அள்ளி வழங்கும் ஹோட்டல்கள், சாக்கடை ஓரங்களில் சாயங்காலம் வறுபடும் மீன்கள், கோழிகள் என அதை சாப்பிடும் மக்களை எப்படிக் காப்பாற்றுவது எனத் தெரியவில்லை. உங்கள் தளத்தைப் பார்த்த பின்னர் கொஞ்சம் நம்பிக்கை வருகின்றது. தொடர்க உங்கள் பணி. நன்றி.

FOOD said...

தங்களைபோன்ற நல்ல உள்ளங்களின் நல் வாழ்த்துக்களோடு என்றும் இந்த பணி தொடரும். நேற்றுகூட நெல்லையில் ஒரு ஸ்வீட் கோடோனுக்கு சீல். சன் செய்திகளில் கீழே ஸ்க்ரோலிங் செய்தி ஓடி கொண்டே இருந்தது. அது பற்றி விரைவில் எழுதுகிறேன். இருபத்தி நான்கு மணி நேரம்தான் போதவில்லை.

RAJAMANICKAM said...

Our service is "noble service" to the public. But we are facing so many problems including life threatening.Vertical setup will help us in some extent.Best wishes.

NARAYANAN said...

Congragulations sir

FOOD said...

ராஜமாணிக்கம் சார், நல்ல காலம் விரைவில் வரும். உணவு பாதுகாப்பு சட்டம்,2006 அமலுக்கு வரும்போது, உங்கள் கனவுகள் நனவாகும்.

நன்றிகள் பல நாராயணனுக்கு. நாளும் வாழ்த்துவதற்கு.