கால்களாய் (நம்பிக்)கை.
உடல் ஒரு பொருட்டல்ல, உள்ளம் உறுதியாயிருந்தால், ஊனங்கள் இங்கே உதாசீனப்படுத்தப்படும். ஆம், சீனத்தில் சீறும் சிங்கத்தின் சிறப்புதான் இது.
பெங்சுலின் இவர் பெயர். வயதொன்றும் அதிகமில்லை-எழுபத்தெட்டுதான். ஐந்து ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் இரு கால்களையும் தொலைத்தவர். இரண்டு ஆண்டுகால மருத்துவ சிகிச்சை இவருக்கு மறுவாழ்வுடன் நம்பிக்கையையும் அளித்திருக்கிறது. அறுவை சிகிச்சைகள், இருக்கும் உறுப்புக்கள் இயங்க வைத்திருக்கின்றன. அவரது தற்போதைய உயரம் 2’7”. தன்னம்பிக்கையின் உயரம்-இமயத்தைவிட இன்னும் அதிகம். கைகளால் உடற்பயிற்சி செய்து, இருக்கும் உடலை இரும்பாக்கி இன்னமும் ஆரோக்கியமாய் வைத்திருக்கச் செய்துள்ளார்.
அவருக்குதவ, பீஜிங்க் மறுவாழ்வு மையம் புறப்பட்டு வந்தது. உடைந்த பக்கெட் போன்று உருவாக்கப்பட்ட சாதனத்தில் உட்கார்ந்து கொண்டு, கேபிள்களால் இணைக்கப்பட்டிருக்கும் கால்களை இயக்குகிறார். இத்துடன் நிற்கவில்லை இவரின் சாதனை. “அரை மனிதனின் அரை விலை கடை” (HALF MAN'S HALF PRICE SHOP) என்ற பெயரில் பல்பொருள் அங்காடி ஒன்றையும் நடத்துவதுடன், “ஊனத்தை உதாசீனப்படுத்துவது” குறித்து மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சி வகுப்பும் எடுத்துவருகிறாராம்.
உள்ளம் உறுதியாயிருந்தால், ஊனம் ஒரு பொருட்டல்ல. இமயங்கள் தொடுவதும் - இல்லாமல் போவதும் இனி உங்கள் கைகளில்.
நம்பிக்கைகள் நம்முள் வளரட்டும்.
நாளைய உலகம், நம் கைகளில் அடங்கும்.

2 comments:
மிகவும் நல்ல உத்வேகத்தை தூண்டவல்ல செய்தி.நம்பிக்கைக்கு எல்லை இல்லை என சொல்லும் உரைகல்.மிகவும் நன்றி.
நம்பிக்கைதான் வாழ்க்கை. இந்த மாதம் இருபதாம் தேதி முதல் உணவு பாதுகாப்பு அலுவலர் பயிற்சி எடுக்க தயாராய் இருங்கள் சக்தி.
Post a Comment