ஆசைக்கோர் அளவில்லை. அன்று, ஆறடி மண் கேட்டான் வாமணன் உலகிலே. இன்றோ, நடை பாதை எல்லாம் கேட்கின்றனர் நம்மூர் வியாபாரிகள். பேருந்து நிலையத்திலே பயணிகள் நடக்க கூட வழியில்லை. நடை பாதை எங்கும் ஆக்கிரமிப்புகள். இவை போதாதென்று, இளம்பெண்களுக்கு இடிராஜாக்களின் இம்சைகள் வேறு.
கடை எவ்வளவுதான் பெரிதென்றாலும், நடைமேடையில் கடை விரித்தால்தான், நஷ்டமின்றி நன்றாய் நடக்குதாம் வியாபாரம்! தொல்லை தரா சிந்தனைகள் தொலைத்து விட்ட இவர்களுக்கு துயரங்கள் தருவது ஒன்றே தலையாய சிந்தனை!
பொழுதெல்லாம் பொதுமக்கள் புகார் வாசிக்க, ஆணையர் உத்தரவினை அடுத்து, அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பித்தன.
எந்தவித தலையீடுமின்றி எடுத்து முடித்தோம் ஆக்கிரமிப்புகளை. நிலையத்தில் நின்றிருந்த மக்கள் முகத்திலோ மகிழ்ச்சி. வியாபாரிகள் முகத்திலோ விபரீத உணர்ச்சி. எச்சரித்து வந்தோம் இனியும் தொடரவேண்டாமென்று.
அன்பு வேண்டுகோள்: ஆக்கிரமிப்புகள் ஏற்படுத்த வேண்டாம். அதை அகற்றவும் வேண்டாம். இதைவிட இருக்குது பல இன்றிமையாத பணி.

No comments:
Post a Comment