இறப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது. இன்றும் வரலாம். நாளையும் வரலாம். இறந்த பின்னும் வாழ்வது என்பது சிலருக்கு மட்டுமே கிடைக்கும் சிறப்பு.
உடல் உறுப்பு தானம் குறித்து செய்தி ஒன்று இன்று கண்டேன். மூளை சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இது வரை இருந்து வந்த நடைமுறை சிக்கல்களை தீர்க்கும் வகையில் புதிய உத்தரவு வந்துள்ளது.
எனவே, இருக்கும் வரை இரத்த தானமும், இறந்த பின்னும் உடல் தானமும் செய்திட நாம் ஒவ்வொருவரும் முன்வந்தால், இறந்தும் உயிர் வாழ இனி ஒரு பிறவி எடுப்போம்.

4 comments:
அன்பு ப்ருனோ,
தாங்கள் கொடுத்துள்ள லிங்க் சரியாக வேலை செய்யவில்லை. மீண்டும் லிங்க் தர வேண்டுகிறேன்.
மேலும் விபரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
தகவல்களுக்கு நன்றி. தக்க சமயத்தில் பயன்படுதிகொள்வோம். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
Post a Comment