இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Thursday 30 September, 2010

பிளாஸ்டிக் ஒழித்து பூமியைக் காப்போம்

                                    பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்தால், பூஉலகம் நாளை நம் சந்ததிக்கும்   நன்மை தரும். பூமியைக்காக்கும் புனிதம், புதிய வரலாறு படைக்கும். பிளாஸ்டிக் பொருள் பயன்பாடு, பூமியின் சுவாச பைகளாம் மரங்களை வேரறுக்கும். புரிந்து கொண்டதால், புறப்பட்டது "டீம் டிரஸ்ட்".  புரட்டாசி சனி கிழமைகளில், புண்ணியம் தேடி நவ திருப்பதிக்கும் பயணம் செய்யும் பக்தர்களுக்கென்று சிறப்பு பேருந்துகளை இயக்கியது அரசு பேருந்தின் திருநெல்வேலி கிளை. அதில் சென்ற பக்தர்களுக்கெல்லாம் பிரசாதம் பெற்று வர துணி பைகளை வழங்கி, பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் துன்பங்களை விளக்கி துண்டு பிரசுரங்களும் வழங்கியது மனித உரிமை கழகமும், டீம்  டிரஸ்ட்டும். 
 
                                   என் அன்பு நண்பர் திரு.T.மனோகர் அவர்கள். மாற்று திறனாளிகளுக்கு மாவட்ட அளவில் மனமுவந்து சேவைகள் பல புரிந்ததால், பாராட்டுகள் , நற்சான்றுகள் பலவும் அவர்  பெற்றதுடன், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தவர். உதவிகள் செய்வதற்கு ஓடோடி வருபவர். இன்று பிரசுரங்களை வழங்க வந்திருந்தார்.    
                            துணி பைகளை வழங்கி, இனி பிளாஸ்டிக் பைகள்  வேண்டாம் என்று   கேட்டுக்கொண்டேன் நான். மூன்றாம் உலகப்போர் ஒன்று வருமென்றால், அது நீருக்கான போராய் இருக்குமென்பதில் ஐயமில்லை என்றார். பிளாஸ்டிக் பயன்பாடு  ஒழிக்காவிட்டால், வாழ பூமியிருக்கும்.  மரங்களிருக்காது. சுவாசிக்க காற்றும், பருக, பயன்படுத்த  நல்ல நீரும் இருக்காது.  புவி வெப்பமாதலை தடுக்க புதிய பயணம் தொடங்கியுள்ள திரு. திருமலைமுருகன் அவர்கள்  பணி சிறக்க மனமார வாழ்த்துவோம்.

 















Follow FOODNELLAI on Twitter

9 comments:

prabhadamu said...

கட்டாயம் இதனை செய்ய வேண்டும்.

உணவு உலகம் said...

Certainly, we'll do.

sakthi said...

பூமித்தாய்க்கு அனைவரும் செய்ய வேண்டிய பொறுப்பான பணிகளில் தலையாயது பிளாஸ்டிக்கை அறவே ஒழிப்பதுதான்.அதற்கான ஆயத்த பணிகளை ஆரம்பித்த அனைவருக்கும் என் நன்றி.

உணவு உலகம் said...

நன்றி சக்தி.

Unknown said...

Eradication of Plastic Things are very useful to Human Life

மாதேவி said...

நன்று. வாழ்த்துவோம்.

உணவு உலகம் said...

நன்றி மாரியப்பன் சார். நன்றிகள் மாதேவிக்கும்.

NARAYANAN said...

Like this motivation campaign is essential for us and the enviornment.
By S.Narayanan Sanitary Inspector Sattur Municipality

உணவு உலகம் said...

CERTAINLY.