இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday 12 October, 2010

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் சீரிய முன்னேற்றங்கள்.

                                சிறுநீரக அறுவை சிகிச்சையில் சீரிய முன்னேற்றம். 


            சிறுதுளை அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய முடியுமென இலண்டன், ஹேமர்ஸ்மித் மருத்துவமனையின் அறுவை சிகிச்சைத்துறை பேராசிரிர் திரு.நேடி ஹக்கீம், தாமே வடிவமைத்த ஒரு தொழில் நுட்பம் மூலம் சாத்தியமென நிரூபித்துள்ளார். சாதாரணமாக 10 முதல் 15 செ.மீ. அளவில் வயிற்றில் துளையிடப்பட்டு நடத்தப்படும் அறுவை சிகிச்சை முறைகளுக்கு மத்தியில் பேராசிரிர் ஹக்கீம் 2.5 செ.மீ. அளவில் துளையிட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யமுடியுமென நிரூபித்துள்ளது, ஆயிரக்கணக்கில் மாற்று அறுவை சிகிச்சைக்கென காத்திருப்போர் நெஞ்சங்களில் பாலை வார்த்துள்ளது. 
                                                
        ஏனெனில், சிறுநீரகம் தானமாக அளிப்பவர்கள், அவர்தம் உடலில் பெரிதாய் ஏற்படும் தளும்பைக்கண்டு அஞ்சுவதுண்டு. உடலில் ஏற்படும் தளும்பைவிட, சாதாரண அறுவை சிகிச்சை முறையில் பெரிய  அளவில் உடலில் துளையிடப்படுவதால், தானம் அளிப்பவர்களுக்கு ஹெர்னியா போன்ற  கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மற்ற அறுவை சிகிச்சைகளில், நோயாளிகள் உடம்பில் மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிறுநீரக அறுவை சிகிச்சையிலோ, நோயாளிக்குத் தேவைப்படும் சிறுநீரகம் பல நேரங்களில் உடல் நலமுள்ள உறவினர்களிடமிருந்தே பெறப்படுகின்றன.
        திரு.ஹக்கீம் வடிவமைத்துள்ள சிகிச்சை  முறையில், 2.5செ.மீ. அளவில் மட்டுமே வயிற்றுப்பாகத்தில் துளையிடப்படுவதால், இரத்தம் அதிக அளவில் வீணாவதில்லை. அந்த துளையின் வழியே,சிறிது வளைந்த அறுவை சிகிச்சை கருவியை உள்நுழைத்து சிறுநீரகங்களுககுச் செல்லும் இரத்த நாளங்கள் மற்றும் சிறுநீரகக் குழாயில் கிளிப் செய்வது, சிறுநீரகத்திற்கான இரத்த ஓட்டத்தினை தடை செய்வதால், சிறுநீரகம் பஞ்சுபோல் மாறுகிறது. பின்ன
ர், அதனை பெருவிரல் மற்றும் ஆட்காட்டி  விரல் உதவியுடன் சிறுதுளை வழியே அப்புறப்படுத்துகின்றனர். இதனால், இந்த முறையில் கால விரயம், இரத்த விரயம்,பண விரயம், பெரிய  அளவிலான அறுவை சிகிச்சை தளும்புகள் தவிர்க்கப்படுகின்றன.  

                            500க்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை இம்முறையில் செய்து வெற்றி பெற்றுள்ளார். அறுவை சிகிச்சை முடிந்த நாற்பத்தெட்டு மணி நேரத்தில் நலமடைந்து வீடு திரும்புவது மேலும் பலரை திரு.ஹக்கீமை வாழ்த்த வைக்கும்.
Follow FOODNELLAI on Twitter

6 comments:

Chitra said...

Good post. Thank you for the info. :-)

VELU.G said...

very good post

BADRINATH said...

I want to know more about Kidney opration and postcare. Because my sister is donating kidney to her son. Kindly enlighten more about that
Badrinath

உணவு உலகம் said...

Thank U Chitra madam and Velu sir.
Pl.inform ur mail ID, so that I can send U a lot of information regarding transplantation.

sakthi said...

ரத்த தானத்தை கண்டு பயந்த காலம்போய் உடல் உறுப்பு தானத்தை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மக்கள் பக்குவமடைந்துள்ளனர்.இதுபோன்ற கண்டுபிடிப்புகளால் அறுவை சிகிச்சையை எளிதாக்குவதுடன் மக்கள் மனதில் எஞ்சியுள்ள கொஞ்ச பயமும் அறவே அகலட்டும்.தகவலை தந்த தங்களுக்கும் நன்றி.

உணவு உலகம் said...

ஒவ்வொரு பதிவிலும் உவகையுடன் நல்ல பல கருத்துக்களை நட்புடன் நல்கி வரும் சக்தி, அது புதிது புதிதாய் பதிவுகள் படைத்திட அளித்திடும் எனக்கு சக்தி. நன்றி.