இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Wednesday 13 October, 2010

புற்று நோய்க்கு புது மருந்து.

                     புற்று நோய்க்கு புது மருந்தொன்று ,இலவசமாய் வழங்கபடுகிறதாம். எனது மெயில் பாக்சை திறக்கும்போதெல்லாம்,  வந்து விழுகின்றன புதிது புதிதாய் இ- மெயில்கள் - வியாழகிழமை உலக புற்று நோய் தினமென்று. என்னதான் இருக்கிறதென்று பல வலை பக்கங்களை வலம் வந்து பார்த்தால், பெப்ரவரி- 4 ,   உலக புற்று நோய் தினமென்று கண்டேன். இருந்தும் என்ன! மெயிலில் வந்த தகவல் பயனுள்ளது என்பதால் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். 
                    இரத்த புற்று நோய்க்கு 'Imitinef Mercilet' என்றொரு மருந்து இலவசமாய் அடையார் புற்று நோய் மருத்துவமனையில் வழங்கபடுகிறதாம். அது இரத்த புற்று நோயை சுத்தமாய் துடைத்திடுதாம். 1954 இல் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையில், அனைத்து புற்று நோய்களுக்கும் நல் மருத்துவ சிகிச்சைகள் வழங்கபடுகிறதாம்.புற்று நோய்களில் பல வகைகள் உண்டு. இரத்த புற்று அதில் ஒரு வகை. 
                               அடையாறு மட்டுமல்ல, மேலும் பல மருத்துவமனைகளிலும் மேற்கண்ட மருந்து இலவசமாய் வழங்கப்படுகிறதாம்.  மருத்துவமனைகளிலே தங்கி சிகிச்சை எடுப்பவர்களுக்கு  மட்டுமே இந்த மருந்து வழங்கப்படுகிறதாம்.
                                நான் அறிந்தவரை, எந்த ஒரு புற்று நோய்க்கும், தனி ஒரு மருந்தில் முழு நிவாரணம் கிடைக்கும் என்று உறுதிபட கூற இயலாது.  புதிய மருந்தென்பதால், இனிதாய் சுகபடுத்தட்டும். இறைவனை வேண்டுவோம், இன்னல்கள் தீர. 
                               புகை இல்லா புகையிலை பயன்பாடு அதிகரித்து வருவது ஆபத்துகள்   பலவற்றை அழைத்து வரும். தவிர்ப்போம் புகையிலை பயன்பாடு.  
Follow FOODNELLAI on Twitter

10 comments:

Chitra said...

நல்ல பகிர்வுங்க. நன்றி.

உணவு உலகம் said...

பாராட்ட மனம் வேண்டும். சுட சுட பாராட்ட பரந்த மனம் வேண்டும். வாழ்த்துகளுக்கு நன்றி.

sakthi said...

தகவலுக்கு நன்றி.சிறந்த மனிதர்களுக்கும் சிறந்த விஞ்ஞானிகளுக்கும் நோபெல் பரிசு வழங்கப்பட்டுவரும் இந்த நேரத்தில் தாங்கள் கொடுத்துள்ள தகவல் மிகவும் சந்தோஷத்தை தந்தது.மீண்டும் நன்றி.

உணவு உலகம் said...

THANK U SAKTHI.

Unknown said...

நல்ல தகவல்! பாராட்டுகள்!

vanjimagal said...

"The Adyar Cancer Institute is a real health facility. "Imitinef Mercilet" is apparently an alternative spelling of the cancer drug, Imatinib mesylate. It is true that Imatinib (or "Imitinef") is available free of charge for patients who have been admitted to the Adyar Cancer Institute hospital for cancer treatment. However, the Institute is not handing out the drug freely to all as suggested in the message. Moreover, the drug does not actually cure all blood cancers as claimed in the messasage."

checked directly with Adyar Cancer Institute. It is a complete Hoax.

Let us not play with people's hope.

மதுரை சரவணன் said...

thanks for sharing. vaalththukkal.

இளங்கோ said...

Thanks Sir.

உணவு உலகம் said...

மற்றவர் உயிருடன் விளையாட எவருக்கும் உரிமையில்லை. எனது பதிவிலும், இரத்த புற்று நோய்க்கு முழுமையான மருந்தென்று குறிப்பிடவில்லை. எனினும், வாஞ்சையுடன் வஞ்சிமகள் எடுத்திட்ட சீரிய முயற்சிகளுக்கும், தகவல்களுக்கும் நன்றி. பதிவை பாராட்டிய மதுரை சரவணன், இளங்கோ -தங்களுக்கும் நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள்.

உணவு உலகம் said...

நன்றி ரம்மி சார்.