இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 15 October, 2010

அரசு பொறியியல் கல்லூரியில் ஒரு அற்புத விழா.

                                           அரசு பொறியியல் கல்லூரியில் ஒரு அற்புத விழா. நண்பர்                அரசகுமாரும்   நானும் சிறப்பு விருந்தினர்களாய் கலந்து கொண்டோம். திருநெல்வேலி, அரசு பொறியியல் கல்லூரியின் நுகர்வோர் அமைப்பு (CCC) வியாழனன்று மாலை நடாதிட்ட விறு விறு நிகழ்ச்சி. 

                                        கல்லூரி நாட்களின் கனவுகளை நினைவுபடுத்தி, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பிளாஸ்டிக் கழிவுகளின் பின் விளைவுகளை விளக்கினார், அரசகுமார்.
                            கல்லூரி முதல்வர் திரு.கணேசன் தலைமை உரையாற்றினார்.
                                  நாளைய கனவுகளுடன் கல்லூரி மாணவர்கள்.

    உணவில் கலப்படம் உயிரை குடித்திடும் விதம் குறித்து எனது உரை அமைந்தது.
                                 நான்கு ஜோடி மாணவியர், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படபோகும் இன்னல்களை  எடுத்துரைத்தனர்.  நல்ல பல கருத்துக்களை நறுக்கென்று தெரிவித்தனர்.
                                       
                                  கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கி வந்தோம்.  
                                  ஆங்கிலத்தில் புலமை அவசியம் வேண்டுமென்று நினைத்தனர் போலும்.  விளக்கவுரை முழுவதும் வந்து விழுந்தது ஆங்கிலத்தில். எங்கள் உரை செம்மொழியாம் தமிழ் மொழியிலேயே அமைந்தது.
                                    நல்ல நிகழ்ச்சி, நல்ல முயற்சி.      
                                    நன்றாய் மாணவர்கள் பயன்பெற வழி வகுத்திட்ட                  ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்.சுபா  அவர்களுக்கு பாராட்டுகள்.
Follow FOODNELLAI on Twitter

8 comments:

எறும்பு said...

நல்ல நிகழ்ச்சி, நல்ல முயற்சி.

உணவு உலகம் said...

எறும்பின் சுறுசுறுப்பு(போஸ்டிங் போட்டவுடன் வாழ்த்தியதற்கு) . எங்களுக்கு விறுவிறுப்பு. நன்றி.

Chitra said...

நெல்லை மனம் - மணம் - சூப்பர்!

உணவு உலகம் said...

தொடர்ந்து மணம்
வீசும் என்ற நம்பிக்கைகளுடன், நன்றி.

RAJAMANICKAM said...

I think your Awareness about safe food reached every family of the students. Very good approach. Well done.

உணவு உலகம் said...

நாம் அனைவரும் முயன்றால், முடியாதது ஒன்றுமில்லை.

Ss said...

very nice sir

உணவு உலகம் said...

THANK YOU SHAHUL.