இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Saturday 23 October, 2010

உலக உணவு நாள் உரை.

                        உலக உணவு நாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக வியாழன் மாலை,  பாளை I.I.P.E கணினி மைய  வளாகத்தில்  விழா.
                                   நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க தலைவர் திரு. அனந்தராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில்  உணவு பொருட்களில்  ஒவ்வொரு நாளும் பெருகி வரும் கலப்படங்கள் எவை? அவற்றை கண்டுபிடிப்பது  எப்படி? கலப்படத்தால் கவலைப்பட வேண்டிய விஷயங்கள் எவை என எடுத்துரைத்தேன்.


                                   இனிய மாலை பொழுது இனிமையாய் கழிந்தது.  இறுதிவரை என் முன் வைத்த டீயை மட்டும் நான் அருந்தவேயில்லை.  ஏனெனில், அந்த டீ வைக்கப்பட்ட கப் அப்படிப்பட்டது. பிளாஸ்டிக் கப்பில் டீ வந்ததால், நானும் அருந்தவில்லை. அந்த கூடத்திற்கு வந்த நண்பர் ஒருவரும் அதனை நாசூக்காய் தவிர்த்து விட்டார். பிளாஸ்டிக் ஒழிப்பதென ஊர் முழுவதும் பிரச்சாரம், கேட்காத கடைகரர்களுக்கு அபராதம். நான் மட்டும் அதே பிளாஸ்டிக் கப்பில் டீ அருந்தலாமா? அதனால் தவிர்த்துவிட்டேன். பிளாஸ்டிக் கப்பில் டீ என்றால் அருந்துவதில்லை. பிழையாக எண்ண வேண்டாம்  என்று கூறி, வேண்டுகோள் ஒன்றும் விடுத்து வந்தேன்.  இனி நடைபெறும் கூட்டங்களில் இயற்கைக்கு இன்னல் விளைவிக்காத பேப்பர் கப்புகளை பயன்படுத்த வேண்டினேன். நல்ல காரியம் என்பதால் நிச்சயம் நடத்தப்படுமென்றோர் உறுதிமொழியும் அளித்தனர். 
                              நாம் ஒவ்வொருவரும் , பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்துவதில்லை என்றோர் நிலைப்பாடு எடுத்தால், நாளை உலகம் நம்மை போற்றும். நாளை நம் சந்ததி உண்ண நல்ல உணவும் கிடைக்கும்,  நா வறட்சி தீர்க்க நல்ல நீரும் கிடைக்கும்   என்ற நம்பிக்கைகளோடு - நன்றி.    
Follow FOODNELLAI on Twitter

6 comments:

sakthi said...

பிளாஸ்டிக் கப்புகளை ஒழிக்க பிரச்சாரம் செய்தால் மட்டும் போதும் என நினைக்காமல் பிளாஸ்டிக் கப்பை தவிர்த்த மன உறுதியை பாராட்டுகின்றேன்.

மதுரை சரவணன் said...

// இனி நடைபெறும் கூட்டங்களில் இயற்கைக்கு இன்னல் விளைவிக்காத பேப்பர் கப்புகளை பயன்படுத்த வேண்டினேன். //

naalla muyarchchi. vaallthukkal. thanks for sharing.

உணவு உலகம் said...

எனக்களித்த வாழ்த்துக்களுக்கு நன்றி சக்தி மற்றும் சரவணன் சார். மறு சுழற்சிக்கு பயன்படா பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை என்றே வாக்களித்தால் என்றும் எனக்கது இனிமை.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

Thank you for not using plastic cup at open function. you set an example to others.

உணவு உலகம் said...

நீண்ட நாட்களுக்கு பின் வருகை புரிந்து வாழ்த்திய ராம்ஜி யாகூ நன்றி.
நன்றி சிங்கராஜ் சார். தொடர்ந்து வருகை தாருங்கள்.