மாலை வேளையில், மனதிற்கு இதமாய், வயிற்றிற்குப் பதமாய் உண்ண உகந்த ஓர் உணவு.
வேர்க்கடலை என்ற பெயரே சொல்லும்
வேரில் விளையும் கடலையென்று.
முதலில், மெக்ஸிகோ, தென் மற்றும் மத்திய அமெரிக்கா நாடுகளில் விளைவிக்கப்பட்டது. பின்னர், உலகின் பல பகுதிகளிலும்; பயிரிடப்படுகின்றது. இதிலுள்ள சத்துக்கள் என்று பார்த்தால்,
வேர்க்கடலை100 கிராமில்:
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) - 93.00 மி.கி.
கார்போஹைட்ரேட் - 16.13 கிராம்
காப்பர் - 11.44 மி.கி.
கொழுப்பு - 49.24 கிராம்.
நார்ச்சத்து - 8.50 கிராம்.
இரும்புச்சத்து - 4.58 மி.கி.
மெக்னீசியம் - 168.00 மி.கி.
மேங்கனீஸ் - 1.934 மி.கி.
பாஸ்பரஸ் - 376.00 மி.கி.
பொட்டாசியம் - 705.00 மி.கி.
புரதம் - 25.80 கிராம்.
சோடியம் - 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து - 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து - 6.50 கிராம்.

இரத்த உறைவு, நம் அனைவருக்கும் முக்கியமான ஒரு நிகழ்வு. சிறிய காயங்கள் ஏற்படும்போதோ, அறுவை சிகிச்சையின்போதோ இரத்த உறைவு தாமதமானால், அது உயிருக்கே பெரும் ஆபத்தாக முடியும். சிலருக்கு திடீரென மூக்கில் இரத்தம் வடியும். சில பெண்களுக்கு, மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கு அதிகமாயிருக்கும். இவ்வாறு, இரத்த உறைவு குறைபாடுகள் உள்ளவர்களுக்கு, வேர்க்கடலை ஒரு வரப்பிரசாதம். வேர்க்கடலையிலுள்ள புரதம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நம் உடலிலுள்ள செல் திசுக்கள் மற்றும் மூளை திறம்பட செயல்பட உதவும், நம் உடலின் எலும்புகள் இருகிடச்செய்யும்.
நம் தேசத்தந்தை அன்றே உண்ட வறுத்த வேர்க்கடலையும், ஆட்டுப்பாலும் அத்துடன் சிறிது கருப்பட்டியும் சோ;த்து வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலுர்ட்டும் தாய்க்குக் கொடுத்து வந்தால் அதைவிட அவர்களுக்கு அருமருந்து வேறில்லை. மஞ்சள் காமாலை மற்றும் காசநோய் போன்றவற்றை நம்மருகே வர விடாமல் தடுப்பதில் வேர்க்கடலைக்கு இணையில்லை.
நாம் உண்ணும் உணவின்மூலம் உடலில் சேரும் சர்க்கரையின் அளவைக்குறிப்பது,“கிளைசீமிக் இண்டெக்ஸ்”என்பதாகும். அந்த கிளைசீமிக் இண்டெக்ஸ், வேர்க்கடலையில் குறைவு. எனவே, சர்க்கரை நோயாளிகளுக்கும் இது உகந்தது. மேலும், வேர்க்கடலையிலுள்ள மெக்னீசிய சத்து, சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் இன்சுலினை சுரக்கச்செய்யும். ஹார்மோன்களை இனிதே இயக்கிவிடும்.
வேர்க்கடலை சாப்பிட்டால் பித்தமென்றும், கொழுப்பு உடலில் கூடுமென்றும் வீண் கவலைகள் பலருக்கு உண்டு. பயம் வேண்டாம். வேர்க்கடலையில் உள்ளது-- நல்ல கொழுப்பு. எனவே, கடலை எண்ணெயில் தயாரித்த உணவுப்பண்டங்களும் தாராளமாய் உண்ணத்தகுந்தவையே.
எண்ணெய் கொதித்து புகையாகும் நிலையை அடையும்போதுதான், கெட்ட கொழுப்புக்கள் அதிகம் உருவாகின்றன. மற்ற எண்ணெய் புகையாகும் கொதிநிலை 275 முதல் 300 வரையிருக்கும்போது, கடலை எண்ணெய் புகையாகும் கொதிநிலை கிட்டத்தட்ட 320 வரையிருப்பதால், கடலை எண்ணெயில் கெட்ட கொழுப்பு விரைவில் உருவாகுவதில்லை என்பது நல்ல செய்தி. இத்தகைய வேர்க்கடலையை உண்பதற்கும் ஒரு வரைமுறையுண்டு. புதிதாய் விளைந்த கடலையை உண்பது நல்லது. தோலுடன் சாப்பிடுவதும், வேகவைத்தோ, வறுத்தோ உண்பது மிகவும் நல்லது. நாளான கடலையிலும், முறையாக சேமிக்கப்படாத கடலையிலும், “அப்லோடாக்ஸின்” எனும் நஞ்சுப்பொருட்கள் உருவாகும். அவற்றை நாம் உண்டால், வயிற்றுவலி தொடங்கி, வாழ்நாள் குறையும் பிரச்சனை வரை உருவாகும்.

14 comments:
Thank you for this lot of information.
Informative one. we are using sunflower oil and Poorna rice bran oil. hereafter we consider about the groundnut oil. Thanks for your information
மிகவும் பயனுள்ள பதிவு...சூப்பர்ப்...
THANK YOU FOR THE USEFUL MESSAGE
Peanuts are very good snacks. Thank you for this nice post. :-)
அருமை, நான் ஒரு வேர்க்கடலை பிரியன். தகவலுக்கு நன்றி.
வந்து வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி.
Very very useful message for me
அன்பும் ,மனிதநேயமும் ,உள்ள சகோதரர் அ.ரா.சங்கரலிங்கம் அவர்களுக்கு தங்களின் தன்னலம் அற்ற சேவைக்கு தலைவணங்குகிறேன் .உணவு உலகம் என்ற சிறப்பான பகுதியை இன்றுதான் வாசித்தேன் .ஆகா ,அருமை இப்பணி சிறக்க வாழ்த்துகிறேன் .மிக்க நன்றி அந்தோணிராஜ்
நன்றி நண்பரே. தொடர்ந்து வாருங்கள்.
Very good post.
முதல் வருகை-நன்றி, தினம் வரவேண்டும், முத்திரை பதிக்க வேண்டும், நண்பரே.
நானும் வேர்க்கடலை நிறையா சாப்பிடுவேன் பிறகு வீட்டுப்பெரியவர்கள் அது பித்தம் தலை சுத்தும் சாப்பிடாதேன்னு சொல்லி விட்டார்கள் உன் க்க இந்தபதிவு படித்ததும் ஓரளவு தெளிவு கிடைத்தது. கொஞ்சம் கடலை சாப்பிட்டு உடனே கொஞ்சம் வெல்லம் சாப்பிட்டா தலை சுத்தாது. சமையலிலும் கூட நிரைய கடலை சேர்ப்பேன். வெந்து சாப்பிடும்போது தலை சுற்றல் வருவதில்லை. வறுத்து சாப்பிட்டால் மட்டும் ஏன் தலை சுத்துது? வறுத்து என்றால் எண்ணையில் இல்லே வெரும் சட்டியில் வறுத்து சாப்பிட்டால் கூட தலை சுத்துதே ஏன்
nice post
Post a Comment