இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Sunday, 14 November, 2010

குழந்தைகளை குதறும் குதர்க்கங்கள்.

      குறுக்கு புத்தி மனிதர்கள் 
          குழந்தைகள்  கடத்தல்
             குற்றுயிராக்குதல்
                  பாலியல் தொந்தரவுகள் 
                     பணத்திற்காக மூச்சை நிறுத்தும் 
                         பல்வகை தொந்தரவுகள்
                             இப்படி இன்னும் பல பார்த்து நொந்த நமக்கு 
                                இடிபோல் வந்திறங்கிய இனிப்புகளில் மருந்துகளின் கலப்படம்.
இந்த வாரத்தின் துவக்க நாள். எனது குடும்ப வேலையாக வெளியூர் சென்று திரும்பிகொண்டிருந்தேன். கை பேசியில் ஓர் அழைப்பு. பேசியவர் ஓர் அரசு நரம்பியல் மருத்துவர். நியாயவாதி. நெஞ்சம் பொறுக்காத சில நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.  

             
                                     வந்து கொண்டிருந்த வாகனத்தை நிறுத்த சொல்லி கேட்டேன். சொன்னவை அனைத்தும் பெறும் சோகங்கள். துள்ளி விளையாடும் பிள்ளைகள் பயிலும் பள்ளிகள் அருகில் "தூதுவளை மிட்டாய்"  என்றும் "வல்லாரை மிட்டாய்" என்றும் விற்கப்படும் மிட்டாய்களை வாங்கி தின்ற குழந்தைகள் சிலர் நரம்பு மண்டல பாதிப்பால், சில தனியார் மருத்துவமனைகளில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பேருந்து நிறுத்தம் அருகே பயணத்தின்போது வாந்தி வருவதை தடுக்கும் என்று விற்கப்படும் வல்லாரை மிட்டாய்களை, சிறு குழந்தைகள் வாங்கி உண்டால், வந்து விடுகிறது இந்த பாதிப்பென்றும் வருத்தப்பட்டார்.வாந்தி வருவதை தடுக்கும் மருந்தினை இந்த மிட்டாய்களில், கலப்படம் செய்திருக்கலாம், அதுவே துள்ளி விளையாடும் பள்ளி குழந்தைகளை துவண்டு விழ செய்திருக்கும் என்றார். 
 
                                   அரசு மருத்துவராய் இருப்பதால், இந்த அநியாயங்களை அனைவரும் அறிய அறிவிப்பதில் தயக்கமாய் இருப்பதாகவும் எடுத்துரைத்தார். நரம்பு மண்டலம் பாதித்த குழந்தை ஒன்றிற்கு நாற்பதாயிரம் செலவழித்தும் சீராகவில்லை என்றார். அடுத்த நாள் பத்திரிக்கை ஒன்றில் இது தலைப்பு செய்தியாக வந்தவுடன், விரைந்து வந்தன நடவடிக்கைகள். தனியார் மருத்துவ மனைகளில் கணக்கெடுப்பு நடத்தியது சுகாதாரத்துறை. மாவட்ட தலைநகரம் தவிர்த்து பிற நகர்களிலிருந்தும் பல பிள்ளைகள் சிகிச்சையில் இருந்தனர். திருநெல்வேலி சுகாதாரபனிகள் துணை இயக்குனரும், சங்கரன்கோயில் சுகாதாரபனிகள் துணை இயக்குனரும் பம்பரமாய் சுற்றி எடுத்த பல நடவடிக்கைகளால், மாவட்டம் முழுவதும் மேற்கண்ட மிட்டாய்கள் பறிமுதல்  செய்யப்பட்டன. தடய  அறிவியல் துறைக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன அந்த மிட்டாய்கள். 
  
                                  நெல்லையில் உள்ள மொத்த மருந்து விற்பனை கடையிலிருந்துதான், மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்யபடுவதாக துணை இயக்குனர் அளித்த தகவலின் பேரில்,  நெல்லையில் உள்ள மருந்து மொத்த விற்பனை கடைகளில் அதிரடி சோதனை நடத்தி, இருந்த மிட்டாய்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தோம்.இனியும் இத்தகைய மிட்டாய்களை  விற்க வேண்டாமென எச்சரித்து வந்தோம்.
                                    பறிமுதல் செய்த மிட்டாய்களை, சென்னையில் உள்ள தடய அறிவியல் துறைக்கு அனுப்பி, ஆய்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்.
தீக்கதிர் -13 .11 .10                    சின்ன குழந்தைகள் சிரித்து விளையாடி மகிழட்டும் விடுங்கள் - உங்கள்            சில்லரைதனங்கள் செத்தொழியட்டும் மாறுங்கள். 
Follow FOODNELLAI on Twitter

5 comments:

RAJAMANICKAM said...

Well done.severe punishment must be given to them

FOOD said...

Thank You Sir

sakthi said...

THANK YOU.WE WILL INITIATE ACTION LIKE YOU.ONCEAGAIN THANK YOU.

FOOD said...

HATS OFF TO YOU

cheena (சீனா) said...

அன்பின் சங்கர லிங்கம் - மழலைகள் - குழந்தைகள் சாப்பிடும் மீட்ட்ய்களில் கலபப்டமா ? உருப்படுவானுங்களா இவனுஙக எல்லாம். கடுமையாத் தண்டிக்கணும் இவங்களை எல்லாம். ம்ம்ம்ம் நட்புடன் சீனா