இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 22 November, 2010

மோதிரக்கையால் குட்டு.


                 குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்படவேண்டுமென்பர். அப்படியோர்  குட்டு எனக்கும் கிடைத்துள்ளது, க்ரைம் நாவலில். ஆம். பேருந்து பயணத்தின்போது, வழித்துணைவன் நாடி நான் சென்றதோர்  புத்தகக்கடை. கடையில் பலகையெங்கும் பல விதமான புத்தகங்கள். புரட்டிப்பார்த்தபோது தேடினாலும் கிடைக்காது என்றோர்  நாவல். முன்னணி எழுத்தாளர்  திரு.ராஜேஷ்குமார்  எழுதிய (க்ரைம் நாவல்) அது.
                கல்லூரி   காலங்களில், திரு.ராஜேஷ் குமாரின் தீவிர ரசிகன் நான். கிரைம் நாவல் என்றால், கடைகளில் வந்தவுடன் வாங்கிடவும், வாங்கியவுடன் படித்துமுடித்திடவும், ஆவல் எனக்குள் பொங்கும். ஹூம் - நமக்குத்தான் வாலிபம் கடந்து, பிள்ளைக்கு வரன் பார்க்கும் வயது வந்துவிட்டது. அவர்  எழுத்துக்கள் மட்டும் இன்னும் இளமையாய்த்தான் இருக்கின்றன. சரி, வாங்கிப்படிப்போமென்று  தேடினாலும் கிடைக்காத நாவலை வாங்கிக்கொண்டு பேருந்தில் ஏறினேன்.
                 கோயம்புத்தூரிலிருந்து பேக்ஸ் பகுதியில், காய்கறிகளிலும் கலப்படம் என்ற எனது கட்டுரையை பற்றிய விமர்சனமும், ஆக்ஸிடோஸின் குறித்த எச்சரிக்கைகளையும் நச்சென்று உச்சரித்திருந்தார். இதோ அவை உங்கள் பார்வைக்காக:
Follow FOODNELLAI on Twitter