வழக்குகள் போடுவது மட்டுமல்ல! வழிமுறைகளையும் சொல்லி தெளிய வைப்பதும் எங்கள் பணிதான். திருநெல்வேலி மத்திய சுழற்கழகத்தில், கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டேன்.
கலப்படம் குறித்த கலந்துரையாடலாய் அமைந்தது அது. வந்திருந்த அனைவரும் கலப்படதிற்கு எதிராய் போரிடுவதாய் சூளுரைத்தனர். கலந்துரையாடலுக்கு பின்னே வந்த கேள்வி நேரம் கலகலப்பாய் சென்றது.
அனைவருக்கும் வந்த ஒரே சந்தேகம்!
இத்தனை ரெய்டுகள், இத்தனை வழக்குகள், அத்தனையும் செய்யும்போது அரட்டல் மிரட்டல்கள் வராதா? அடியாள்தான் வராதா?
வரும், வராமலென்ன? வருவதை சமாளிக்க தெரிய வேண்டும். அதுதான் சாமர்த்தியம்.
தொடர்ந்து கலப்பட தயிர் குறித்த செய்தியுடன் சீக்கிரம் எழுதுகிறேன்.

5 comments:
அரட்டல்மிரட்டல்கள்,அடியாள்தான் வரும், வராமலென்ன? வருவதை சமாளிக்க தெரிய வேண்டும். அதுதான் சாமர்த்தியம். These are the true words.We are facing all the above problems.Most of the F.I.'s afraid of the above problem.If Government will give protection to our Food Inspectors, they may do better.
தயிரிலும் கலப்படமா? அறிந்து கொள்ள ஆவல்.
very soon, wait please.
மிரட்டல்களை சவால்களாகவும் தடங்கல்களை தூண்டுகோல்களாகவும் எதிர்ப்புகளை இனிப்புகளாகவும் எடுத்துக்கொண்டு மக்கள் சேவையை மனதில் கொண்டு பணிபுரியும் உணவுஆய்வாளர்களால் மட்டுமே உணவுபாதுகாப்பு சட்டம் வெற்றி பெறும்.
Certainly Sakthi.
Post a Comment