மருத்துவ அலுவலர்களுக்கும், சுகாதார அலுவலர்களுக்கும், தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட மாநகராட்சி ஆணையரின் ஆலோசனை கூட்டமும் நடந்தது.
நேற்று காலை, பாளை பகுதி உணவகங்களில் திடீர் ஆய்வு.கடந்த வாரம் சைவ உணவு விடுதிகள் சரியாய் செயல்படுகிறதா என்று பார்த்தோம். அன்று தகுதி இழந்தது ஆரியபவன். இந்த வாரம் எங்கள் ஆய்வில் மாட்டியது, அசைவ உணவு விடுதிகள்.
முதலில் பார்த்த உணவகம் மூடுவதற்கு முழு தகுதி பெற்றிருந்தது.மனித உணவு தயாரிக்குமிடம் மாசு படிந்து காணப்பட்டது. குளிர்பதன பெட்டியில், உணவு பொருளும், கரை நீக்கும் அமிலமும் ஒரு சேர வைக்கப்படிருந்தன. ஏனிப்படி என்று கேட்டால், குளிர்பதன பெட்டி உயிர்விட்டு போனதால், இரண்டையும் சேர்த்தே இருப்பில் வைத்தோம் என்றனர். என்னே ஒரு பொறுப்பற்ற செயல்!
மழை நேரம், தொற்று நோய்கள் மழ மழவென்று பரவும் என்பதால், மனம் வரவில்லை. உயர் அதிகாரிகள் உத்தரவு பெற்று, உடனே மூட சொன்னோம். இன்றைய ஆய்வில் இம்சை கொடுத்தது ஹோட்டல் பிருந்தாவன்.
என்ன செய்வது இவர்களை? மக்களாய் பார்த்து மனம் வெறுக்காதவரை, மாற்றங்களை இவர்களிடம் எதிர்பார்த்தால், ஏமாற்றம் மட்டுமே எஞ்சி நிற்கும்.

7 comments:
//மக்களாய் பார்த்து மனம் வெறுக்காதவரை, மாற்றங்களை இவர்களிடம் எதிர்பார்த்தால், ஏமாற்றம் மட்டுமே எஞ்சி நிற்கும். //
Yes, its true.
சுட சுட கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றி.
உணவகங்கள் பெயர்களை வெளியிட்டால், மக்களுக்கு பயனுள்ளதாக இருக்குமே.
நல்ல கருத்துக்கு நன்றி. நாளை தருகிறேன் தகவல்களை.
Tirunelveli had a very good Food Safety Officer(Sankaralingam) .Now Nellai people enjoying the Safe food.
But other cities?
My heartful thanks to the nellai team
I expect the same performance from Chennai Team also.
Post a Comment