இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 10 December, 2010

தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்.

                         நண்பர்  இளங்கோவன் நம் சங்க நடவடிக்கைகளில் துடிப்பானவர். அவரிடமிருந்து  மெயில் வந்ததென்றால், அதில் எப்படியும் ஒரு நல்ல செய்தி இருக்கும். அது  ஒரு நபர் கமிஷன் சம்பந்தப்பட்ட அரசாணையாக இருக்கலாம் அல்லது சங்க உறுப்பினர்களுக்கு  தேவையான முக்கிய தகவல்களாக இருக்கலாம். அதனை அனைவருக்கும் மின்னஞ்சலில் தருவது அவர் பணியாயிருக்கும். 
                                             அப்படித்தான் இன்றும் எனது இன் பாக்சில் இனிய நண்பர் இளங்கோவனின் இ-மெயில். பார்த்தால், பயனுள்ள  செய்தியது. உணவு பாதுகாப்பு சட்டம் ஜனவரியில் அமலுக்கு வருவதாக, FSSAI இன் சேர்மேன்  திரு. சுவர்த்தன் அவர்கள் தெரிவித்த செய்தி. ஜனவரி  மாதம் உணவு பாதுகாப்பு விதிகள் அரசிதழில் வெளியிடப்படுமென்றும், அவ்வாறு  வெளியானவுடன், இந்தியா முழுவதும் மேற்கண்ட சட்டம் அமலுக்கு வந்து விடுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, தை பிறந்தால் வழி பிறக்கும்.
                                                 உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும்போது, நம் உணவு பொருட்களின் தரம் அகில உலக அளவில் உயரும். உலக அளவில், உன்னதமான, ஒருங்கிணைந்த சட்டமாக இது இருப்பதால்,  உலக நாடுகள் நம்மை கண்டு வியக்கும்.  நம் அனைவருக்கும், மிகவும் பாதுகாப்பான உணவு கிடைக்கும். 
                                                      நல்ல விஷயம்தானே, நடக்கட்டும் சீக்கிரம். 
FSS ACT implemented JAN-2011-PI Suvrathan, Chairman of Food Safety and Standards Authority of India (FSSAI)                                   An integrated food law ‘Food Safety and Standards Act’ (FSSA) will come into force in January next year replacing the Prevention of Food Adulteration Act, a senior official said here today. 
                                  “From January next onwards the Prevention of Food Adulteration Act which is currently in force in the country will be repealed and the ‘Food Safety and Standards Act’ will come into being. The new law is a scientific law which tries to promote food safety,” Food Safety and Standards Authority of India (FSSAI) Chairman P I Suvratan said.
                                    Addressing the 43rd Annual National Conference of Indian Dietetic Association at the National Institution of Nutrition (NIN) here, he said “The rules and regulations of the FSSA are ready and it has gone to the Government of India for notification. By January, I think it will be notified by the Government and once it is done each state will now have to withdraw the Prevention of Food Adulteration Act,” he said.
                                    Suvratan said “not many countries have a comprehensive functional food laws even now and India will be the first one to think about in that direction and we are proceeding very cautiously.”
                                   “FSSA is having a scientific approach to development of food standards and to regulate whole food supplements in the country. Henceforth, we will be working with the manufacturers who will be responsible to ensure food safety.”
                                      He further said international markets will seek details on the components of Indian traditional foods and if clinical studies have been conducted on such products to establish safety which we don’t have any.
                                     “Next year will be extremely critical for India to develop scientific justification for traditional foods. It (traditional foods) may be safe, but we have not established the safety in that. We have to generate scientific evidence,” Suvratan said.

Follow FOODNELLAI on Twitter

9 comments:

Chitra said...

ஜனவரி மாதம் உணவு பாதுகாப்பு விதிகள் அரசிதழில் வெளியிடப்படுமென்றும், அவ்வாறு வெளியானவுடன், இந்தியா முழுவதும் மேற்கண்ட சட்டம் அமலுக்கு வந்து விடுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.


....Great news!!!

உணவு உலகம் said...

Your speed is too great.

NARAYANAN said...

Sir, All Food Inspectors are expecting this. Thankyou for this news. By S.Narayanan B.sc., Food Inspector Sattur Municipality Tamilnadu

உணவு உலகம் said...

With U with expectations

இளங்கோ said...

Its a great news. Thank you for sharing with us.

RAJAMANICKAM said...

Thank you Elangovan(Food Inspector, Thammampatti.T.P.,Salem) for immediate email and sms. I am very proud of you.I am also appreciate our Unavu ulagam EDITOR, Mr.A.R.Sankaralingam for publishing the above news immediately in the web site.Continue your dedicated service. Lot of Thanks. We are also expecting the implement ion of FSSA.

உணவு உலகம் said...

Thanks Elango Sir. Thanks a lot Rajamanickam Sir.I am with you to see the implementation.

sakthi said...

உணவுலக துரோணருக்கு இந்த ஏகலைவனின் காணிக்கை கலந்த வணக்கம்.விடாது பெய்த தொடர் மற்றும் கன மழையின் காரணமாக வெள்ள நிவாரண பணிகளில் மூழ்கியிருந்ததால் தொடர்பு கொள்ள கொஞ்சம் தாமதமாகிவிட்டது.தங்களது பேட்டிகள் மற்றும் தகவல்களை ராணி மற்றும் குமுதம் வார இதழ்களில் படித்தேன்.மிகவும் மகிழ்ச்சி.உணவு பாதுகாப்பு சட்டத்தின் முக்கிய நோக்கமே பாதுகாப்பான உணவு கிராமப்புறத்து மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்பதுதான்.அந்த நோக்கம் தங்களது இந்த பணிகள் மூலம் நிறைவேறிக்கொண்டிருக்கிறது.சக நண்பர்களையும் சக ஊழியர்களையும் தன்னை பின்பற்றுபவர்களையும் பாராட்டலாம்.ஆனால் குருவை பாராட்ட மாணவனுக்கு உரிமையில்லை.மாறாக குருவின் பெயரைக்காக்கும் கடமை மாணவனுக்கு உண்டு.அந்த வகையில் கடந்த 7.12.2010என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள். அன்று சென்னையில் துணை ஆணையர் தலைமையில் உணவு ஆய்வாளர்களுக்கு நடந்த கலந்தாய்வில் நகர்நல அதிகாரி அவர்களால் TOP MOST IN THE CITY PERFORMANCE என்ற பாராட்டு இந்த ஏகலைவனுக்கு கிடைத்தது.அதனை மிகுந்த சந்தோஷத்துடன் தங்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.

உணவு உலகம் said...

தரணியெங்கும் தங்கள் புகழ் பரவவேண்டும். தாய் தமிழ்நாடு தலை நிமிர தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். கடமை ஒன்றே தங்களுக்கு கண் என்று அறிவேன். காலம் கனிந்து வரும். நம் கனவுகள் அத்தனையும் மெய்ப்படும்.நன்றி சக்தி. வாழ்த்துக்கள்.