இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Sunday 12 December, 2010

மனித உரிமை கழகத்தில் ஓர் மாலை நேர விழா.

                                   திருநெல்வேலி மனித உரிமைகள்  கழகம் மற்றும் டீம் டிரஸ்ட் இணைந்து  மாலை வேளையில் நடத்திய ஓர் விழாவில், 2010 ஆண்டில் சாதனை படைத்த பல்வேறு துறை சார்ந்தோருக்கு பாராட்டும், நற்சான்றும் வழங்கினர்.  
  
                                   விருதுநகர், முதன்மை  மாவட்ட நீதிபதி கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்கள் சிறப்புரை ஆற்றி அனைவருக்கும் ஆக்கமும், ஊக்கமும் அளித்தார்கள். திருநெல்வேலி கோட்டாட்சி தலைவர் திருமதி. தமிழ்செல்வி, மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் திரு. மனோகர், பாளை மத்திய சிறை  கண்காணிப்பாளர் திரு.ஆனந்தன், மதிப்பிற்குரிய அந்தோணி குருஸ் அடிகளார்,ஜானகிராம் அந்தோணி,மனித உரிமைகள் கழக மாவட்ட தலைவர் திரு. திருமலைமுருகன் என சகல கலா வித்தகர்கள் வீற்றிருந்த சபையில், பார்வையற்ற பள்ளி மாணவியரின் நடனம் அனைவர் மனதையும் கவர்ந்தது என்பதைவிட நெகிழ வைத்தது என்பதே பொருந்தும். 
                                      எத்தனைதான் இத்தகைய பாராட்டுக்கள் பெற்றாலும், நமது பதிவுலக நண்பர்கள், அதிலும் சித்ரா மேடம், ராஜமாணிக்கம் சார், சக்திமுருகன், நாராயணன் போன்றோர் ஒவ்வொரு பதிவிலும் தவறாமல் தங்கள் முத்திரை சொற்களை பதிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி அலாதிதான்.
Follow FOODNELLAI on Twitter

4 comments:

sakthi said...

Really I AM VERY HAPPY ABOUT KNOWING YOU ARE REWARDED

உணவு உலகம் said...

Thank U Sakthi

RAJAMANICKAM said...

I am very happy to know the news. I am really very proud of you.congratulations. Vaalga valarga!

NARAYANAN said...

Sir I am very happy to read this news and congratulations By S.Narayanan B.Sc Sanitary Inspector Sattur Municipality Tamilnadu