பசுக்கள் தரும் பாலைக்காய்ச்சி, பக்குவமாய் உரையும் ஊற்றி,அற்புதமாய் அறுசுவை உணவுடன் அம்மா பருகக்கொடுக்கும் தயிரும்,மோரும் தலைமுறைகள் மாற்றம்போல் தலை கீழாய் போனதெப்படி?
பசும்பாலிற்கும், எருமைப்பாலிற்கும் சுவை, சத்து, குணம் என எல்லாவற்றிலும் வேறுபாடு உண்டு. நம் நாட்டு பசு தரும் பாலிற்கும், வெளிநாட்டுப்பசு தரும் பாலிற்கும் வேறுபாடுகள் உண்டு.பசுக்கள் வாழும் சூழ்நிலைக்கேற்பவும், நாம் அவற்றிற்கு வழங்கும் உணவிற்குத் தக்கவும் பாலின் தரம் வேறுபடும்.
பசும்பாலிற்கும், எருமைப்பாலிற்கும் சுவை, சத்து, குணம் என எல்லாவற்றிலும் வேறுபாடு உண்டு. நம் நாட்டு பசு தரும் பாலிற்கும், வெளிநாட்டுப்பசு தரும் பாலிற்கும் வேறுபாடுகள் உண்டு.பசுக்கள் வாழும் சூழ்நிலைக்கேற்பவும், நாம் அவற்றிற்கு வழங்கும் உணவிற்குத் தக்கவும் பாலின் தரம் வேறுபடும்.
ஒரே நாட்டிற்குள்ளும், மாநிலத்திற்கு மாநிலம் பாலின் தரம் வேறுபடும். பால் என்று எடுத்துக்கொண்டால், கொழுப்பு சத்து, கொழுப்பு அல்லாத பிற சத்துக்கள் என்று இரு வகையான சத்துக்களே அதில் உள்ளன. பிற சத்துக்களில், பாலில் அடங்கியுள்ள உயிர் சத்துக்கள், தாதுக்கள் ஆகியவை அடங்கும்.
பஞ்சாப், ஹரியானா, சண்டிகார் மாநிலங்களில் உள்ள பசுக்கள் தரும் பாலில், கொழுப்பு சத்து 4 சதவிகிதமும், பிற சத்துக்கள் 8.5 சதவிகிதமும் இருக்கும். அதுவே, நமது நாட்டின் பிற மாநிலங்களில் கொழுப்பு சத்து 3.5 சதவிகிதம் மட்டுமே இருக்கும்.
நாலுக்கும் ஐந்திற்கும் நடுவில் நாங்கள் விற்கும் பாலில் கொழுப்பு சத்து இருக்கும் என்ற விளம்பரம் எல்லாம் செயற்கையாய் கொழுப்பு சத்து ஏற்றம் செய்யப்பட்ட பாலையே குறிக்கும்.
ஒரு உணவு பொருளில் இயற்கையாய் உள்ள சத்துக்களை பிரித்தெடுப்பதும் கலப்படம் என்றே உணவு கலப்பட தடை சட்டம் சொல்கிறது. இயற்கையாய் பசுக்கள் சுரக்கும் பாலிலிருந்து, கொழுப்பை சுரண்டி எடுப்பதே மனிதனின் மகத்துவம்.
அப்பப்பா, ஆக்சிடோசின் கொடுமை என்றால், இது அதைவிட கொடுமை அன்றோ. ஆக்சிடோசின் ஊசியை போட்டு, அதிகம் பால் கறக்க,
பால்காரருக்கு ஆசை. பாலிலுள்ள கொழுப்பை எடுத்து, நெய்யை விற்க பால், தயிர் விற்பவருக்கு ஆசை. அதனை குடிக்க குழந்தைகள் மட்டும் என்ன பாவம் செய்தன?
இங்கும் ஓர் உணவு விடுதி. அரசு ஊழியர் குடியிருப்பிற்கு அருகில் உள்ளதால், வார இறுதி நாட்களில், அமர்ந்து உணவருந்த அடிபிடியாய் இருக்கும். அது மட்டுமல்ல, ஓய்வு பெற்றோர் இல்லங்களுக்கே சென்று உணவை வழங்கும் உத்திகளும் உண்டு.
பால்காரருக்கு ஆசை. பாலிலுள்ள கொழுப்பை எடுத்து, நெய்யை விற்க பால், தயிர் விற்பவருக்கு ஆசை. அதனை குடிக்க குழந்தைகள் மட்டும் என்ன பாவம் செய்தன?
இங்கும் ஓர் உணவு விடுதி. அரசு ஊழியர் குடியிருப்பிற்கு அருகில் உள்ளதால், வார இறுதி நாட்களில், அமர்ந்து உணவருந்த அடிபிடியாய் இருக்கும். அது மட்டுமல்ல, ஓய்வு பெற்றோர் இல்லங்களுக்கே சென்று உணவை வழங்கும் உத்திகளும் உண்டு.
ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒரு மதிய வேளையில், அதிரடி சோதனை மேற்கொண்டோம். உணவுடன் வழங்கப்பட்ட தயிரில் கலப்படம் செய்யபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மாதிரி எடுத்து மதுரையில் உள்ள பகுப்பாய்வகம் அனுப்பி வைத்தோம்.
கிடைத்த அறிக்கையில், உணவு மாதிரியாக அனுப்பப்பட்ட தயிரில், கொழுப்பு சத்து குறைவாக இருப்பதாக குறைகள் கூறப்பட்டிருந்ததால், உரிய அனுமதி பெற்றே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

11 comments:
I have a doubt..... Over here, milk is sold as whole milk - 2 % milk, 1 % milk and skim milk (total fat is removed) - They are properly labeled. Curd (Yogurt) is also sold as plain yogurt, lowfat yogurt and no fat yogurt. It helps people, who are on diet to buy the item that they want.
Is it possible to sell milk or curd/yogurt in India, that way?
Yes.It is allowed legally. But removal of fat (with declaration about available fat on the label) of the product does not come under adulteration. Removal of fat without declaration is only declared as adulteration. Fat removal should be for the benefit of the health of the public and not for filling the pocket of the vendor. Hope, I've cleared Ur doubt. Thank You.
மிக்க நன்றிங்க....
உங்களின் பல நடவடிக்கைகளை பற்றி தினசரியில் படித்து கொண்டிருக்கிறேன்..... அதற்கு முதலில் என் வாழ்த்துக்கள்.
கலப்படம் என்பது புதிதாய் ஒன்றை மற்றொன்றுடன் கலப்பது என்றே நினைத்து இருந்தேன்...! மேலும் பால் பண்ணைகளில் பாலின் கெட்டி தன்மைக்காக ஏதோ ஒரு தானியத்தை (விதை) அரைத்து பால் எடுத்து அத்துடன் சர்க்கரையை கலந்து பாலுடன் சேர்ப்பார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்...இது சரிதானா...? உண்மைதானா??
Sir, Vanakkam. Public should be aware about the Oxytocin and the urea in Milk. By S.Narayanan B.Sc., Food Inspector Sattur Municipality.
பாலிலும் தயிரிலும் கலப்படம் என்னும் அரக்கன் இருக்கிறான் என்னும் உண்மையினை உலகறிய சொன்ன தங்களுக்கு நன்றி
நன்றி கௌசல்யா மேடம்-தங்களின் ஆர்வத்திற்கு. டீ கடைகளில் தண்ணீர் பாலையும் கெட்டியாக காட்ட, ஜவ்வரிசி மாவினை ஒரு துணியில் கட்டி சிறு பொட்டலமாக உள்ளே போட்டிருப்பார்கள். சர்க்கரை ஒரு இயற்கையான ப்ரிசெர்வேடிவ்.(PRESERVATIVE) அதனால்தான் இனிப்புகள் சிறிது காலம் கெடாமல் இருக்கின்றன. பால் பண்ணைகளில் மாவும் சீனியும் கலக்குகிறார்கள் என்பது எனக்கும் புதிய செய்தி. நெல்லை என்றால் சொல்லுங்கள், அதையும் ஒரு கை பார்த்து விடுவோம்.
நன்றி நாராயணன் மற்றும் சக்தி.
Good article.
THANKS A LOT
உங்க ப்ளாக் மக்களுக்கு இன்று உணவில் விழிப்புணர்வை தரும் பயனுள்ளதாக இருக்கு,பகிர்வுக்கு நன்றி. எனக்கு அறிமுகப்படுத்திய கௌசல்யாவிற்கும் நன்றி.
அன்பின் சங்கர லிங்கம் - கலப்படம் என்றால் எதையாவது கலப்பது என நினைத்திருந்தேன். தயிரில் இருக்கும் கொழுப்புச் சத்தினை எடுப்பதும் ( டிக்ளேர் பண்ணாமல் ) கலப்படக் குற்றம் தான் என்பது இப்பொழுது தான் தெரிகிறது. நட்புடன் சீனா
Post a Comment