இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 27 December, 2010

குட்டித் தூக்கம் உடலைக் குண்டாக்குமா?             பகலில் குட்டித்தூக்கம் போடுபவரா நீங்கள்? பரவாயில்லை தொடருங்கள். மதிய உணவிற்குப்பின் ஒரு குட்டித்தூக்கம், அந்த நாளின் மீதிப்பொழுதை சுறுசுறுப்பாய்க் கழித்திட பெரிதும் உதவிடும். பகலில் தூங்கவே கூடாது, உடல் குண்டாகிவிடுமென எச்சரிப்போர்  பலர். பாருங்கள் இந்த செய்தியை:
          சீனாவில் நடைபெற்ற ஆராய்ச்சியிது. பிறந்து ஒரு மாதமான குழந்தைகள் முதல் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஒரு குழுவாகவும், ஐந்து வயதிற்கு மேல் பதிமூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டனர். இரு குழுக்களிலும் சேர்ந்து  தோ;ந்தெடுக்கப்பட்ட குழந்தைகள் சுமார்  இரண்டாயிரம் பேர். அவர்களது தூக்கம்; தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டன. 
         முதல் குழவினர்  பத்து மணி நேரம் வரை இரவில் தூங்கினர். இரண்டாவது குழுவினர், ஒன்பதரை மணி நேரம் வரை தூங்கினர். இரு குழுக்களிலும், சில குழந்தைகள் இரவில் ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்கினர். ஐந்தாண்டு முடிவில் நடத்தப்பட்ட பரிசோதனையில், சிறு குழந்தைகளில், 33 சதவிகிதம் பேரும், சிறுவர்களில் 36 சதவிகிதம் பேரும் உடல் பருத்திருந்தனர்.
         உடல் பருமனடைந்தவர்களில், பெரும்பாலானோர், குழந்தைப்பருவத்தில்இரவில் ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கியவர்கள் என்பது தெரியவந்தது. அந்த ஆராய்ச்சியில் தெரிய வந்த உண்மை யாதெனில்,இரவில் துhக்கம் தொலைத்தலே, உடல் பருக்க முக்கியமான காரணமாகும், பகல் நேர குட்டித்தூக்கம் உடல் பருக்க வைப்பதில்லை என்பதே.
Follow FOODNELLAI on Twitter

1 comment:

Anonymous said...

திருவாளர் அ.ரா.சங்கரலிங்கம் அவர்களுக்கு, தங்களின் இந்த பதிவை நான் மீள்பதிவு செய்துள்ளேன் .

குட்டித்தூக்கம் உடலை குண்டாக்குமா?

நன்றி , அரசன்.
...