இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Sunday 12 December, 2010

ஒரு செய்தி- ஒரு பார்வை.

                               ஒரு விடுமுறை நாளின் விடிகாலைப்பொழுது. பாதாள சாக்கடை நீர்  வீதியில் பாய்ந்து ஓடுகிறதென்றோர் புகார். ஆம். ஆற்று வெள்ளமாய்  ஊற்றெடுத்து ஓடியது கழிவு நீர். துறை சார்ந்த அலுவலர்களுக்கு தகவல்கள் பறந்தன. அத்தனை பேரும் அங்கு திரண்டனர். 
         பாதாள சாக்கடை குழாய்க்குள் இறங்கி கழிவு நீர் அடைப்பை சரிசெய்ய மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாதென அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனிதக்கழிவை மனிதனே அகற்றக்கூடாதென்பதே அதன் தாத்பயம். தமிழ்நாட்டரசும்  பாதாள சாக்கடை குழாய்க்குள் இறங்கி கழிவு நீர் அடைப்பை  சுத்தம் செய்ய மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாதென அரசாணை பிறப்பித்துள்ளது.
         எப்படி சீர்செய்வது இதனை என்றாலோசித்தோம் இயந்திரங்களின் உதவியை நாடினோம்.
         எப்படி ஏற்படுகின்றன இத்தகைய அடைப்புகள்? 
                பெரும்பாலும் உணவகங்கள் தொழிற்சாலைகள் தங்கும் விடுதிகள் மருத்துவமனைகள் ஆகியவற்றிலிருந்துதான் அதிக அளவில் கழிவு நீர் வெளியேறும். இத்தகைய இடங்களில் பல்வகைப்பட்ட பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்வதால் அவர்கள் கழிவுகளை கண்டபடி கழிவு நீர் குழாய்களில் போடுகின்றனர். அவ்வாறு போடப்படும் கழிவுகள் வெளியேறும் குழாயினை பாதாள சாக்கடை பிரதான குழாய்களில் நேரடியாக இணைப்பதால் அவை பிரதான குழாயின் நீரோட்டத்தைத் தடுத்து அடைப்பை ஏற்படுத்துகின்றன.
         என்ன செய்யலாம்? பெரிய  நிறுவனங்களிலிருந்து கழிவுகள் வெளியேரும் குழாயினை நேரடியாக பிரதான குழாயில் இணைக்கக்கூடாது. பெரிய நிறுவனங்களிலிருந்து கழிவுகள் வெளியேரும் குழாயினை பிரத்யோக தொட்டி (DIAPHRAGM CHAMBER) ஒன்றில் இணைத்து, அதன்பின்னர் அதனை பிரதான குழாயுடன் இணைக்கவேண்டும்.
                  பிரத்யோக தொட்டியில் அடைப்பை ஏற்படுத்தும் திடக்கழிவுகள் வடிகட்டப்படுவதால் பிரதான குழாயில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும். எனவேதான் பெரிய  வணிக நிறுவனங்களிலிருந்து கழிவு நீரை பிரதான குழாய்களில் இணைப்பதற்கு திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
நாம் என்ன செய்யலாம்?
                               மனிதனை மனிதனாய் மதிப்போம். மனிதக்கழிவுகளை மனிதன் அகற்றும் முறைதனை ஒழிப்போம். கழிவு நீர் குழாய்களில் கழிவு நீர் மட்டுமே வெளியேற உள்ளாட்சி நிறுவனங்களுடன் ஒத்துழைப்போம். அதுவே நாம் மனித சமுதாயத்திற்கு செய்யும் மகத்தான சேவையாகும்.
Follow FOODNELLAI on Twitter

5 comments:

RAJAMANICKAM said...

மனிதனை மனிதனாய் மதிப்போம். மனிதக்கழிவுகளை மனிதன் அகற்றும் முறைதனை ஒழிப்போம்.

NARAYANAN said...

Sir Vanakkam. Like this awarness is necessary for the public to safe the workers (also officials) and I have need the copy of notices. by S.Narayanan B.sc Sanitary Inspector Sattur Municipality Tamilnadu

உணவு உலகம் said...

Thank U Rajamanickam sir& Narayanan. I'll send the stickers.

sakthi said...

தாங்கள் செய்துள்ள பணி போற்றுதலுக்குரியது என்பதில் ஐயமில்லை

உணவு உலகம் said...

நன்றி