செய்தி-1:மனதை மயக்கும் இந்த மலர்கள், ஊட்டி ரோஜாக்கள் அல்ல. நெல்லை மாவட்டம், மானூரில் விளைந்துள்ள கேந்தி பூக்களே!
செய்தி-2: இன்று டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தூத்துக்குடி துறைமுகத்திற்கு,விடுதலை போராட்ட வீரர், சுதேசி கப்பலோட்டிய தமிழன், வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
செய்தி-3 : பாளை, சேவியர் கல்லூரி, சமூக பணி துறை சார்பில், வரும் 29 மற்றும் 30 தேதிகளில், சர்வதேச அளவிலான, திருநங்கைகள் கருத்தரங்கு நடைபெற உள்ளது. திருநங்கைகளின், சமூக, பொருளாதார, கல்வி நிலை உயர இக்கருத்தரங்கு உதவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8 comments:
செய்தி 01 : ஆச்சரியம்
செய்தி 02 : மகிழ்ச்சி
செய்தி 03 : அவசியம்
சார்! கடந்த பதிவில் உங்க நகரத்தை ' வில்லேஜ் ' என்று குறிப்பிட்டு விட்டேன்! அதற்காக வருந்துகிறேன்! மன்னிச்சிடுங்க சார்!
கிராமங்கள் வளர்ந்தே நகரங்கள் ஆகின. தவறொன்றுமில்லை, சகோதரா. தகவலுக்காக சொன்னேன். வருகைக்கு நன்றி
நேற்று, தமிழ்மணத்தில் ஏதோ ப்ரோப்லம் இருந்ததால், ப்லாக் பேஜ் ஓபன் ஆகவில்லை. நல்ல செய்திகளை தொடர்ந்து தருவதற்கு நன்றிங்க....
பூக்கள் கண்ணிற்கு குளிர்ச்சி...
//திருநங்கைகள் கருத்தரங்கு நடைபெற உள்ளது.//
நம்ம நெல்லை பல நல்ல விசயங்களுக்கு முன் உதாரணமாக இருக்கும்னு சொல்வாங்க...இப்ப புரிஞ்சிடுச்சு...
பகிர்வுக்கு மகிழ்கிறேன்
சித்ரா, கௌசல்யா, ராம்ஜி -தங்கள் வருகைக்கும், கருத்து பதிவுகளுக்கும் மிக்க நன்றி.
நாளைய நெல்லையைப்பற்றியும் அறிந்துகொள்ளும் ஆவலோடு, இன்றைய நெல்லை பற்றித் தெரிந்துகொண்டேன்.
பகிர்வுக்கு நன்றிங்க!
வழுதுணங்காய் -வாசம் வீசுது. வாழ்த்துக்கள் சுந்தரா.
Post a Comment