மின்சார செய்தியின்று.
செய்தி-1 : நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில், தலா 1000 மெகா வாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் உலைக்கான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, கடந்த 25 ம் தேதி அணு உலையின் உறுதி தன்மை கண்டறியபட்டுள்ளது. மார்ச் மாதத்தில், இதில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அணு மின் நிலைய இயக்குனர் அறிவித்துள்ளார். இரண்டாவது மின் உலை, டிசம்பர் மாத இறுதிக்குள் இயங்க தொடங்கும்.
செய்தி-2 : நெல்லை மாவட்டம், வீரகேரளம்புதூர் அருகிலுள்ள சண்முகபுரத்தில், விவசாய கழிவுகளிருந்து, ஒரு மணி நேரத்திற்கு 18 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க வல்ல ஆலை ரூபாய் எழுபத்திரண்டு கோடியில் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம், நாற்பத்திநான்கு பேர் நேரிடையாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் பயன்பெறுவர்.
இவை வந்த பின்னராவது, இருள் அரக்கனின் இம்சை தீருமா?

5 comments:
மகிழ்ச்சி.
மார்ச் மாதத்தில், இதில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அணு மின் நிலைய இயக்குனர் அறிவித்துள்ளார்.
......Super...... I hope that there would be less power outages, this summer... :-)
1.Thanks for your visits.
2. Let's hope.
உங்கள் நகருக்கு நல்லா முறையில் மின்சாரம் கிடைக்க எனது வாழ்த்துக்கள்! நகர அபிவிருத்தியில் மின்சாரத்தின் பங்கு அளப்பரியது இல்லையா?
தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.
Post a Comment