நன்றி :shutterstock.com
களக்காடு அருகே தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் யானைகள் நேற்றிரவு வயல்களில் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தியதுடன், பனை மரங்களை பிடுங்கி எறிந்தன. களக்காடு அருகே உள்ள புலவன் குடியிருப்பு, பூதத்தான்குடியிருப்பு பகுதிகளில் கடந்த 3 மாதமாக யானைகள் பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து, கோயிலின் அருகே உள்ள 3 பனை மரங்களை பிடுங்கி எறிந்து, அதன் குருத்துக்களை தின்றன. அதன்பிறகு வெள்ளப்பாறை பகுதியில் உள்ள பூதத்தான்குடியிருப்பில் வயலில் புகுந்து சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்களை சேதப்படுத்தின.

5 comments:
யானைகள் ஊருக்குள் புகுந்து சொத்துக்களை சேதப்படுத்துவது கவலைக்குரிய விஷயமாகும்! இதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உங்கள் பதிவு அத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும்!
இதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தங்களிருவர் கருத்துக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. ஒலிக்கின்றவர்கள் காதுகளில் ஒலிக்க வேண்டும்.
பொருட் சேதம் மட்டும் அல்ல, மக்களுக்கும் பாதுகாப்பு இருக்காதே....
நிச்சயம் சித்ரா! சரி அதை நாங்கள் ( மற்ற ப்ளாகர்ஸ்) பார்த்துகொள்கிறோம். நீங்கள், இந்த நாளை இனிமையாக கொண்டாடுங்கள். மீண்டும் ஒருமுறை மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
Post a Comment