தசை திறன் சிதைவு நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் கல்வியில் பின்னடைவு ஏற்படுகிறது. இதுவரை இந்நோய்க்கு, வெளி நாடு சென்றே சிகிச்சை பெற வேண்டும் என்ற நிலை இனி மாறும் வகையில், அத்தகைய நோயாளிகளுக்கு, நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரு பகல் நேர சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. .
இன்று நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகிலுள்ள வெள்ளங்குளியில் அத்தகைய மையம் ஒன்றை திறந்து வைத்தபோது, தமிழகத்தில் ஆறு இடங்களில் தசை திறன் சிதைவு நோய் சிகிச்சை மையம் அமைய உள்ளதாக மத்திய இணை அமைச்சர் திரு. நெப்போலியன் கூறியுள்ளார்.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய ஊர்களில் இத்ததகைய மையம் தொடங்க மத்திய அரசு 500 கோடி ரூபாயும், தமிழக அரசு 225 கோடி ரூபாயும் ஒதுக்கியுள்ளது. நல்ல செய்திதானே!

5 comments:
பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
அமைச்சரின் புதல்வருக்கு இந்த நோய் இருந்து வீரவநல்லூரில் குணம் செய்யப் பட்டது
மிகவும் பயனுள்ள செய்தி .மிக்க நன்றி.
அமைச்சர் குறித்த தனிப்பட்ட செய்தி வேடாமென்று விட்டுவிட்டேன்,ராம்ஜி- யாகூ.
நன்றி ராம்ஜி- யாகூ ,சக்தி.
Thats good news!
நன்றி சித்ரா.
Post a Comment