செய்தி ஒன்று:
நேர்மையும், நெஞ்சுரமும் மிக்க இந்த அதிகாரி(திரு.கா. பாஸ்கரன்) நெல்லை மாநகராட்சியில் எட்டு மாதங்கள் ஆணையாளராக பணிபுரிந்தவர். நெல்லை புதிய பேருந்து நிலையத்தில், இரு சக்கர வாகன பார்கிங்கிற்கு "ஸ்மார்ட் கார்ட்" திட்டம் கொண்டு வந்து பயணிகள் பலரின் பாராட்டு பெற்றவர் என்பது ஒரு உதாரணம். தற்போது திருவாரூர் மாவட்ட மக்கள் பயன்பெற அங்கு மாவட்ட ஆட்சியராய் பணிபுரிய செல்கிறார். மனமார வாழ்த்தலாம் வாங்க.
செய்தி இரண்டு:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முதல்முறையாக பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. வனத்துறையும், அசோகா சுற்று சூழல் இயல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து இந்த அரும் பணியினை துவக்கியுள்ளன. நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள 1387 குளங்களில் முதற்கட்ட கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதில் 53 குளங்களில் பறவைகளின் வருகை அதிகமாக உள்ளது கண்டறியபட்டுள்ளது. தற்போது ஆறு குழுக்கள், அந்த 53 குளங்களில் மட்டும் தீவிர கணக்கெடுப்பு எடுத்து வருகின்றனர்.

3 comments:
பகிர்விற்கு நன்றிகள்
மூன்றடைப்புக்கு சிறு வயதில், அடிக்கடி பறவைகளை காண சென்றதை இரண்டாம் செய்தி நினைவு படுத்தியது. :-)
நன்றி ராம்ஜி யாஹூ, ஜீவன்ராஜ் -தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருவதற்கு.
நன்றி சித்ரா.
தாய் நாடும், தாய் மண்ணும் எப்போதும் தங்கள் நினைவுகளில். வாழ்த்துக்கள்.
Post a Comment