தாமிரபரணி ஆற்றில் மழை காலங்களில் பயன்படுத்த இயலாமல் கடலில் சென்று கலக்கும் 2675 மில்லியன் கன அடி வெள்ள உபரி நீரை தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு திருப்பி விட, தாமிரபரணி- கருமேனி- நம்பியாறு ஆகிய நதிகளை இணைக்கும் திட்டம் 2014 இல் நிறைவேறும் என்று அப்பணிகளை ஆய்வு செய்த பொதுப்பணி துறை செயலர் தெரிவித்துள்ளார். நதிகள் இணைப்பில் நெல்லை முன்னோடியாக திகழ்கிறது.
மேலும், மணிமுத்தாறு அணையில் ரூபாய்.13 .50 கோடியில், இடிதாங்கி உள்ளிட்ட நவீன கருவிகள் பொருத்தப்பட உள்ளன. குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளே இன்றைய நெல்லையின் இனிப்பான செய்தி.

5 comments:
திட்டம் திட்டமிட்டபடி நடை பெற விரும்புகிறேன்.
நல்ல எதிர்பார்ப்பு. நடக்கும் என்ற நம்பிக்கைகளுடன்.
இன்றுதான் உங்கள் வலைப்பூவைப் பார்க்கிறேன்! மிகவும் பெறுமதியான விஷயங்களைச் சொல்லி வருகிறீர்கள்! வாழ்த்துக்கள்! உணவுப்பாதுகாப்பு ஒவ்வொரு தனி மனிதனிலும் இருந்து தொடங்குகிறது! அப்படித்தானே!!
நதிகள் இணைப்பில் நெல்லை முன்னோடியாக திகழ்கிறது.
...HAPPY NEWS!!!
1.உணவு பாதுகாப்பு, உங்களிலும்,என்னிலுமிருந்து என்றென்றும் தொடங்குகின்றது நண்பரே!
2.நல்ல செய்தி என்பதால்தான் நதிகள் இணைப்பை பகிர்ந்து கொண்டேன்.
வருகைக்கு நன்றி,இருவருக்கும்.
Post a Comment