புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
கடந்த ஆண்டின் இறுதியில், கடைகளில் விற்கப்படும் ஆப்பிள்களில் மெழுகு பூசி விற்கப்படுவதாக, மாவட்ட ஆட்சி தலைவருக்கும், எங்கள் மாநகராட்சி ஆணையாளருக்கும் வந்த புகார்களின் அடிப்படையில், திடீர் ஆய்வு மேற்கொண்டோம்.
தேன் கூடுகளிலிருந்து கிடைக்கும் தேன் மெழுகு பூசி விற்பனைக்கு வரும் ஆப்பிள்கள் அதிக காலம் கெடாமல் இருக்கும் என்பதால், அரசு அதனை அனுமதித்துள்ளது. ஆனால், நமக்குதான் பேராசை என்றொன்று உண்டே.
விலை அதிகம், கிடைப்பதும் அரிதென்பதால், மனிதனின் மகா மூளைக்கு மலிவாய் கிடைத்திட்ட விஷயம்தான் பெட்ரோலிய கழிவு மெழுகு. இந்த மெழுகு பூசிய ஆப்பிள்களை உண்பதால், அந்த மெழுகு நம்மை மெல்ல கொல்லும் விஷமாகின்ற்றது. ஆம், ஆப்பிள்களின் மேல் உள்ள தோலில்தான் சத்துக்கள் உண்டென்று பெரியோர்கள் சொன்ன காலம் போய், அந்த தோலும் நமக்கு விஷமென்று பதறும் காலமிது. கவனம் மிக தேவை.

6 comments:
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இதையும் படிச்சி பாருங்க
உடலை கிழித்து உணர்வை காட்டும் ஓவியங்கள்
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.உணவு பாதுகாப்பு சட்டத்தை தன்னுள் கொண்டு பிரசவ நேரத்தை எதிர்நோக்கி பிறந்துள்ள இந்த ஆண்டு இந்தியாவின் முன்னேற்றப்பாதையில் மைல்கல்.இந்த இனிய நாளில் இயற்கையின் வரப்பிரசாதமான ஆப்பிள் பழங்களை கொள்ளை லாபம் சம்பாதிக்கும் எத்தர்கள் என்ன செய்கிறார்கள் என தெளிவாக சொன்ன தங்களுக்கு நன்றி.
நன்றி சண்முக குமார் சார். தாங்கள் சுட்டி காட்டிய பதிவை சென்று பார்த்தேன். நல்ல தகவலுக்கு நன்றி.
உணவு பாதுகாப்பு சட்டம் விரைவில் அமுலாகி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உரிய பணி மேற்கொள்ள உதவிடும் இந்த புத்தாண்டு.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
WISH YOU A HAPPY & PROSPEROUS NEWYEAR, ILANGO SIR.
தகவல்கள் மிக வியாப்பால்ல இருக்கு.... உங்களின் எச்சரிக்கை தகவலுக்கு மிக்க நன்றிங்க.
Post a Comment